• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நான்ஜிங்
  2016-06-17 18:55:59  cri எழுத்தின் அளவு:  A A A   

கன்ஃபியூசியெஸ் கோயில்

இக்கோயில், பெரிய அளவிலான பழைய கட்டிடங்களால் உருவாக்கப்பட்டது. இது, கன்ஃபியூசியெஸை வணங்கும் இடமாகும். ஆண்டுதோறும் வசந்தகாலம் முதல் விளக்கு திருவிழா வரையிலான காலத்தில், கன்ஃபியூசியெஸ் கோயிலில் பிரசித்தி பெற்ற விளக்கு விழா கொண்டாட்டம் நடைபெறும். இது நான்ஜிங் பிரதேசத்தில் தனிச்சிறப்பு வாய்ந்த நாட்டுப்புற பண்பாட்டு நிகழ்ச்சியாகும். அந்நகரின் மக்கள் நாட்டுப்புறக் கலையை இந்த நிகழ்ச்சியின் மூலம் பரவச் செய்து வருகின்றனர்.

ச்சின்ஹுவாய் ஆறு

ச்சின்ஹுவாய் ஆறு, நான்ஜிங் நகரின் பண்பாட்டைச் சிறப்பாக வெளிப்படுத்தும் இடமாகும். வரலாற்றில், இது மிகவும் புகழ்பெற்றது. சீனாவின் புகழ்பெற்ற முதல் வரலாற்றுப் பண்பாட்டு ஆறு என இது அழைக்கப்படுகிறது. கடந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, நான்ஜிங் நகரின் சுறுசுறுப்பான இடமாக இது திகழ்ந்து வருகின்றது. பல புகழ்பெற்ற குடும்பங்கள் பல, ஆற்றங்கரையின் இரு மருங்கிலும் வாழ்ந்து வருகின்றனர். புகழ்பெற்ற வரலாற்றுக் கதைகள் பல அங்கு நிகழ்ந்துள்ளன.

சுவான்சாங் கோயில்

1942ஆம் ஆண்டு, யூஹுவா தாய் எனும் இடத்திலுள்ள டா பாவ் என் கோயிலில் ஒரு கல் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கே, சுவான்சாங் துறவியின் எலும்புகளின் புதைபடிவங்கள் வணங்கப்பட்டு வருகின்றன. 1943ஆம் ஆண்டின் துவக்கத்தில், ஜியோஹுவா மலையில் ஒரு கோபுரம் கட்டியமைக்கப்பட்டது. 2003ஆம் ஆண்டு, நான்ஜிங் நகரின் சிவான்வூ பிரதேச அரசும் கட்டுமானப் பணியகமும் சிறிய சியோஹுவா மலையில் ஒரு கோயிலை புணரமைத்துள்ளன. இது தான், சுவான்சாங் கோயில் ஆகும்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040