• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ச்சொங்சிங்
  2016-06-17 18:54:07  cri எழுத்தின் அளவு:  A A A   

நட்பு நகரங்களாகும் சீனாவின் ச்சொங்சிங்-இந்தியாவின் சென்னை

ச்சொங்சிங் மாநகரம், சீனாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. சுமார் 3000 ஆண்டுகால வரலாறுடைய இந்த நகரம், சீனாவின் புகழ்பெற்ற பண்பாட்டு நகரமாகும். அதன் பரப்பளவு 82400 சதுர கிலோமீட்டர். மக்கள் தொகை 3 கோடியே 30 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. ச்சொங்சிங் மாநகரம், 76 விழுக்காட்டான மலைப் பிரதேசத்தைக் கொண்டுள்ளதால், மலை நகரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நகரத்தின் ஆண்டு சராசரி வெப்பம் 16-18℃ ஆகும்.

ச்சொங்சிங் மாநகரம் மிகவும் அழகானது. இங்கு எழில் மிக்க சுற்றுலா காட்சிதலங்கள் உள்ளன. யாஞ்சி ஆற்று மூ மலை பள்ளத்தாக்கு நீர்சேமிப்பு மையத் திட்டப்பணி, உலகப் பண்பாட்டு மரபுச் செல்வமான தா சூ கலைச்சிற்பம், உலக இயற்கை மரபுச் செல்வமான வூ லுங் கார்ஸ்ட் புவி அமைப்பு ஆகியவை இதில் இடம்பெறுகின்றன.

ச்சொங்சிங் மாநகரம், சீனாவின் முக்கிய நவீன தயாரிப்புத்துறை தளமாகவும் தென்மேற்கு பிரதேசத்தின் ஒட்டுமொத்த போக்குவரத்து மையமாகவும் விளங்குகிறது. மின்னனு தகவல், வாகனத் தயாரிப்பு, வேதியியல் தொழில், மூலவளம், நாணயம் முதலிய துறைகள் ச்சொங்சிங்கில் வேகமாக வளர்ந்து வருகின்றன.

ச்சொங்சிங் மாநகரத்திற்கு, மூன்று முக்கிய தனிச்சிறப்பியல்புகள் உள்ளன.

1. வெப்பமான நகரம். கோடைகாலத்தில் ச்சொங்சிங்கின் வானிலை மிகவும் வெப்பமாக இருக்கிறது. அடுப்பாக அழைக்கப்பட்டது.

2. சுவையான உணவுகள். காரச் சுவை, ச்சொங்சிங் உணவில் இன்றியமையாதது. ஹோ கோ (HOT POT) ச்சொங்சிங் மக்களுக்கு மிகவும் பிடிக்கும்.

3. அழகான இரவுக்காட்சி. மலை நகரமாக அழைக்கப்பட்ட ச்சொங்சிங்கின் இரவுக்காட்சி, ஹாங்காங்கை விட மேலும் அழகானது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040