200பேர் இடம்பெற்றுள்ள இந்திய இளைஞர்கள் குழு தற்போது சீனாவில் பரிமாற்றப் பயணம் மேற்கொண்டு வருகின்றது. 100பேர் அடங்கும் ஒரு குழு தற்போது சீனாவின் செங்து, குய்லின், குவாங்சோ ஆகிய மாநகரங்களுக்கு செல்கிறது. மற்றொரு குழு, ஷிஆன், நான்ஜிங், ஷாங்காய் ஆகிய மாநகரங்களில் பயணம் மேற்கொண்டு வருகிறது.
இந்திய இளைஞர் குழுவின் ஒரு பிரிவு 19ஆம் நாள் ஷிஆன் பழைய நகரில் உள்ள தாயான் பகோடாவிலும் தாசிங்சான் கோயிலிலும் பயணம் மேற்கொண்டுள்ளது.