இந்திய இளைஞர்கள் பிரதிநிதிக் குழுவினர்கள் ஜுன் திங்கள் 20ஆம் நாள் செங் து மாநகரிலுள்ள "சின் காங்ஜியன்" இளைஞர்களின் வளர்ச்சி மையத்தைப் பார்வையிட்டுள்ளனர். இந்த மையத்தின் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் தலைமையில், இக்குழுவினர்கள் சீனாவின் கையெமுத்துக் கலை, சீன குங்ஃபூ கலை, சோற்றுப்பசை உருண்டை தயாரிப்பு முதலிய சீனாவின் பாரம்பரிய பண்பாடுகளை உணர்ந்து கொண்டுள்ளனர்.