• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அடையாளச் சின்னத்தில் மறைந்திருக்கும் கதை ஏது?
  2016-08-31 15:34:33  cri எழுத்தின் அளவு:  A A A   

2016ம் ஆண்டு ஜி20 உச்சி மாநாடு செப்டம்பர் திங்கள் சீனாவின் ஹாங்சோவில் நடைபெறவுள்ளது. இந்த உச்சி மாநாட்டின் அடையாளச் சின்னம் வெளியிடப்பட்டது.

இந்தச் சின்னத்தில், 20 கோடுகள், "G20 2016 CHINA" எனும் ஆங்கில எழுத்துகள், "中国" என்ற சீன பாரம்பரிய முத்திரை ஆகியவை இடம்பெறுகின்றன. குறிப்பாக, 20 கோடுகள், பாலத்தின் உருவத்தை படமாக வரைந்துள்ளன. சின்னத்தில், பாலத்தின் உருவம் ஏன்?அதற்கு சிறப்பு பொருள் இருக்கிறதா?

ஒருபுறம், ஜி20 குழுமம், உலகப் பொருளாதார வளர்ச்சிக்கான பாலமாகவும், சர்வதேச ஒத்துழைப்புக்கான பாலமாகவும், எதிர்காலத்தில் கூட்டாக வெற்றி பெறும் பாலமாகவும் மாறியுள்ளதை இந்தப் பாலம் குறிக்கிறது. மேலும், தகவல் காலத்தில் ஒன்றை ஒன்று இணைக்கும் நிலையையும் இப்பாலம் வெளிக்காட்டுகிறு.

மறுபுறம், பாலம், ஹாங்சோ கலாச்சாரத்தின் சின்னமாகும். அழகான ஹாங்சோவில் மலைகளும் ஏரிகளும் ஆறுகளும் நிறைந்திருக்கின்றன. எனவே பல பல பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. பழைய காலத்தில், ஆயிரம் பாலங்களின் நகர் என்ற பெருமை ஹாங்சோவுக்கு கிடைத்துள்ளது. ஹாங்சோவில் உள்ள ஒவ்வொரு பாலத்திற்கும் மரபுவழி கதை ஒன்று உண்டு.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040