• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரிக்ஸ் நன்மைகள்
  2016-10-14 15:58:12  cri எழுத்தின் அளவு:  A A A   

பிரிக்ஸ் நன்மை: பிரிக்ஸ் அமைப்புக்குள் மக்களுக்கு தரும் நன்மைகள்

பிரிக்ஸ் நாடுகளின் பல்கலைக்கழகக் கூட்டணி உருவாக்கம்(2015ம் ஆண்டு)

பிரிக்ஸ் நாடுகளின் பல்கலைக்கழகக் கூட்டணி, சீனாவின் பெய்ஜிங்கில் நிறுவப்பட்டதாக 2015ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் நாள் அறிவிக்கப்பட்டது. பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் 50க்கும் அதிகமான புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த வேந்தர்கள், பெய்ஜிங் பொது கருதுக்களை உருவாக்கினர்.

 

தென்னாப்பிரிக்காவில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் மக்களுக்கு எளிமையான விசா முறை(2015ம் ஆண்டு)

தென்னாப்பிரிக்காவின் புதிய விசா அமைப்பு முறைக்கிணங்க, பிரேசில், ரஷியா, இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த, தூதாண்மை, அலுவல் முறை மற்றும் சாதாரண கடவுச் சீட்டு கொண்டோர், தென்னாப்பிரிக்காவை அடையும்போது விசாவை பெறலாம் என்ற சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்க உள்துறை அமைச்சர் மாலுசி ஜிகாபா 2015ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் நாள் கேப் டவுனிலுள்ள செய்தியாளர் கிளப்பில் உரை நிகழ்த்திய போது, மேற்கூறிய நாடுகளை சேர்ந்த மக்கள் தென்னாப்பிரிக்கா வந்தடையும் போது பெறும் விசாவின் கால வரம்பு பத்து ஆண்டுகளாகும். ஆனால் ஒரு முறை அவர்கள் தென்னாப்பிரிக்காவில் தங்கியிருக்கும் காலம், 30 நாட்கள் என்ற வரம்புக்குள் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

 

பிரிக்ஸ் நாடுகளின் மக்கள் தொகை பிரச்சினைக்கான ஒத்துழைப்பு(2015ம் ஆண்டு)

பிரிக்ஸ் நாடுகளின் மக்கள் தொகை பிரச்சினைக்கான முதலாவது அமைச்சர்களது கூட்டம் 10ஆம் நாள் பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் நடைபெற்றது. மக்கள் தொகை மற்றும் வளர்ச்சி ஆகிய பிரச்சினைகள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

பிரிக்ஸ் நாடுகளின் மக்கள் தொகை உலக மொத்த மக்கள் தொகையில் 40 விழுக்காடு வகிக்கிறது. இந்நாடுகள் எதிர்நோக்கும் ஒரு முக்கிய பிரச்சினை வறுமையாகும். இவை, வறுமை ஒழிப்பில் பரஸ்பர அனுபவங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று பிரேசில் துணை நெடுநோக்கு விவகார அமைச்சர் மர்செலொ நேரி சுட்டிக்காட்டினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040