• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரிக்ஸ் வாய்ப்புகள்
  2016-10-14 16:05:36  cri எழுத்தின் அளவு:  A A A   

பிரிக்ஸ் அமைப்பில் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு மற்றும் வாய்ப்பு

பொருளாதாரத் துறை

உலகப் பொருளாதார எதிர்காலம் பற்றிய அறிக்கை ஒன்றை, சர்வதேச நாணய நிதியம் அடுத்த வாரம் வெளியிடவுள்ளது. இது குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டின் லகார்தே செப்டம்பர் 28ஆம் நாள் பேசுகையில், சீனாவிலும் இந்தியாவிலும் பொருளாதாரம் சீராக வளர்ந்து வருகிறது. பிரேசில், ரஷியா ஆகிய நாடுகளில் பொருளாதார அதிகரிப்பை மீட்கும் அறிகுறி தோன்றியுள்ளது என்று தெரிவித்தார்.

இது குறித்து சீன வெளியுறவுத் துறைச் செய்தித் தொடர்பாளர் கேங் சுவான் செப்டம்பர் 29ம் நாள் பெய்ஜிங்கில் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில்,

பிரிக்ஸ் நாடுகள், உலக பொருளாதார அதிகரிப்பின் முக்கிய உந்து சக்தி ஆகும். அக்டோபரில் கோவாவில் நடைபெறும் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் சந்திப்பில், உலகின் ஆட்சிமுறையின் சீர்திருத்தத்தை முன்னெடுப்பதற்காக முயற்சி மற்றும் பங்களிப்பை எடுக்கப் போவதாக தெரிவித்தார்.

நாணய மற்றும் நிதித் துறை

பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கி பங்கு பத்திரச் சந்தையில் முதல் தொகுதி ரென் மின் பி கடன் தொகையை 2016ஆம் ஆண்டு ஜுலை 18ஆம் நாள் வெளியிட்டது. அதன் மொத்த தொகை 300 கோடி யுவானாகும். கால அட்டவணை 5 ஆண்டுகளாகும். இத்தொகுதி கடன் பாண்டா கடன் என்று அழைக்கப்படுகிறது. பாண்டா கடன் என்பது சீனாவில் வங்கிகளுக்கிடையே பங்கு பத்திரச் சந்தையில் ரென் மின் பி மூலம் மதிப்பிடப்படும் கடனாகும். பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கி 2015ஆம் ஆண்டு ஜுலை 3ஆம் நாள் நிறுவப்பட்டது. அதன் தலைமையகம் ஷாங்காய் மாநகரில் அமைந்துள்ளது. பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 உறுப்பு நாடுகள் தலா 20 விழுக்காட்டு நிதி என்ற அளவில் இவ்வங்கியின் பங்கிற்குப் பொறுப்பேற்றன.

புதிய வளர்ச்சி வங்கி டிரெக்டர் சபையின் 5வது கூட்டம் ஏப்ரல் திங்கள் அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனில் நடைபெற்றது. முதலாவது தொகுதி கடன் திட்டப்பணி பற்றிய தீர்மானம் இக்கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இக்கடன் திட்டப்பணியில் ஒட்டுமொத்த தொகை, 81.1 கோடி அமெரிக்க டாலராகும். சீனா, இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்காவின் தூய்மையான எரியாற்றல் திட்டப்பணிக்கு இக்கடன் தொகை பயன்படுத்தப்படும்.

முதன்முறையாக, கடன் திட்டப்பணியை வெளியிட்டுள்ளது. புதிய வளர்ச்சி வங்கியின் முக்கிய மைல் கல்லாகும் என்று பிரிக்ஸ் வங்கியின் தலைவர் கே.வி.காமத் தெரிவித்தார்.

திரைப்படத் துறை

முதலாவது பிரிக்ஸ் நாடுகளின் திரைப்பட விழா, உள்ளூர் நேரப்படி 2016ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 2ஆம் நாள் இந்தியாவின் தலைநகரான புது தில்லியில் நடைபெற்றது.

இத்திரைப்பட விழா, 5 நாட்கள் நீடித்தது. பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா முதலிய ஐந்து பிரிக்ஸ் நாடுகளின் 20 திரைப்படங்கள் இவ்விழாவில் திரையிடப்பட்டன.

2வது பிரிக்ஸ் நாடுகளின் திரைப்பட விழா, 2017ஆம் ஆண்டில் சீனாவின் செங் து நகரில் நடைபெற உள்ளது.

ஊடக துறை

முதலாவது பிரிக்ஸ் நாட்டு செய்தி ஊடக உச்சி மாநாடு 2015ஆம் ஆண்டு டிசம்பர் 1ம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறைத் தலைவர் லியு ச்சி பாவ் இம்மாநாட்டில் நிகழ்த்திய உரையில், திறப்பு, இணக்கம், ஒத்துழைப்பு, மற்றும் கூட்டு வெற்றி என்ற பிரிக்ஸ் நாடுகளின் எழுச்சியை வெளிக்கொணர வேண்டும். இதன் மூலம் அமைப்பு முறை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, பிரிக்ஸ் நாட்டு ஊடகங்கள் ஒத்துழைப்புடன் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம் ஆகியவற்றில் தமது நாடு பெற்றுள்ள சாதனைகளையும் எதிர்காலத்தையும் பிரிக்ஸ் நாட்டு ஊடகங்கள் முழுமையாக வெளிப்படுத்த வேண்டும். அமைதியான வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பு மூலம் கூட்டு வெற்றி என்ற கருத்தை ஆக்கப்பூர்வமாக பரவல் செய்து, சர்வதேச நேர்மை மற்றும் நீதி தொடர்பான முக்கிய பிரச்சினைகளில் கூட்டாக குரல் எழுப்பி, உலகக் கட்டுப்பாட்டு முறைமை மேலும் நியாயமான திசையை நோக்கி வளர்வதை முன்னேற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040