• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சொங்ட்சிங் பற்றிய அறிமுகம்
  2016-10-14 17:25:49  cri எழுத்தின் அளவு:  A A A   

இந்நிகழ்ச்சியில் சீன வானொலியில் பணி புரியும் இந்தியாவைச் சேர்ந்த செய்தியாளர் அனிலுடன் அழகான சொங்ட்சிங் மாநகரைச் சுற்றுப்பார்க்க வாருங்கள்.

சொங்ட்சிங் மாநகர் சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ளது. யாங்சி ஆற்றங் கரையில் அமைந்துள்ள இந்த நகரம் சீனாவின் முக்கிய நீர், தரை மற்றும் வான் வழி போக்குவரத்து மையமாகும்.

சுவையான உணவுகள், அழகான இரவுக் காட்சி, சிச்சுவான் இசை நாடகம் ஆகியவை சொங்ட்சிங் மாநகரின் தனிச்சிறப்புகளாகும்.

சீனாவின் சொங்ட்சிங் சுவையான உணவுப் பொருட்களின் சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது. குறிப்பாக இங்குள்ள ஹொ கோ என்னும் உணவு வகை தற்போது உலகளவில் பரவலாகப் பரவி அதிக மக்களை ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இரவில், நான்சான் எனும் மலை உச்சியிலும் சரி, யாங்சி ஆற்றுக்கு மேல் உள்ள கம்பி காரிலும் சரி சொங்ட்சிங் நகரின் அழகான இரவுக் காட்சியைக் கண்டுகளிக்க முடியும். மலை உச்சியில் கட்டியமைக்கப்பட்டுள்ள இந்த நகரம் அழகான இரவுக் காட்சியால் சிறிய ஹாங்காங் என்றும் அழைக்கப்படுகிறது.

முக பாவணை சிச்சுவான் இசை நாடகத்தின் தனிச்சிறப்பு. பல்வேறு தலைமுறை சிச்சுவான் இசை நாடகக் கலைஞர்கள் இதில் புதிய அம்சங்களை இடைவிடாமல் சேர்த்து வருகின்றனர். சிச்சுவான் இசை நாடகம் சீனத் தேசிய நிலை பொருள் சாரா மரபு செல்வங்களின் பிரதிநிதியாக உலக கலை அரங்கில் நுழைந்துள்ளது.

தவிரவும், தாச்சூ கற் சிற்பம், சொங்ட்சிங் மாநகரிலுள்ள உலகப் பண்பாட்டு மரபு செல்வங்களில் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. ச்சிச்சியாங் பலகை ஓவியங்களின் மூலம் விவசாயிகளின் பார்வையில் சமூகத்தின் மாற்றங்களைக் கண்டறியலாம்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040