• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனா-ஏபெக் ஒத்துழைப்பு(ப.சக்திவேல்)
  2016-11-18 16:33:36  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன வானொலி தமிழ்ப் பிரிவின் செய்தியாளர் ப.சக்திவேல்

நவம்பர் 19 மற்றும் 20 ஆகிய நாட்களில் ஏபெக் அமைப்பின் மாநாடு பெரு நாட்டின் லிமா நகரில் நடைபெற உள்ளது, இது உலக நாடுகளிடையே மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.. இந்த ஏபெக் அமைப்பின் மாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பங்கேற்க உள்ளார். இதைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்பாக ஏபெக் அமைப்பின் வரலாற்றை அறிந்து கொள்வோம்..

ஆசிய – பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பே ஏபெக் என பரவலாக அழைக்கப்படுகிறது, பசிபிக் கடலை ஒட்டிய நாடுகளின் பொருளாதாரக் கூட்டமைப்பு ஒன்றியமே ஏபெக் அமைப்பு ஆகும், இந்த ஆசிய பசிபிக் வட்டார நாடுகளின் பொருளாதாரம் வர்த்தகம் மற்றும் முதலீடுகள் போன்றவற்றை பற்றி ஆராயவும் அது குறித்து முடிவெடுக்கவும் இந்த நாடுகள் ஆண்டுதோறும் கூட்டம் நடத்துகின்றன, ஏபெக் அமைப்பு நாடுகள் உலகின் மொத்த பொருளாதாரத்தில் 60 சதவீதத்தை வகிக்கின்றன. இந்த அமைப்பின் தலைமையிடம் சிங்கப்பூரில் செயல்பட்டு வருகிறது.

2014 ஆம் ஆண்டு சீனாவின் பெய்ஜிங் மாநாகரில் ஏபெக் அமைப்பின் மாநாடு நடைபெற்றது நினைவுகூறத்தக்கது, கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ்சில் இந்த மாநாடு நடைபெற்றது, இந்த ஆண்டு பெரு நாட்டின் லீமா நகரில் நடைபெற உள்ளது, இதில் இந்த அமைப்பின் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டு நடப்பு பொருளாதாரப் பிரச்சனைகள் மற்றும் ஏபெக் அமைப்பின் நாடுகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து விவாதிக்க உள்ளனர், இதில் சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் முக்கிய உரை நிகழ்த்த உள்ளார், கால நிலை மாற்றம் குறித்த பிரச்சனைகள் குறித்தும் இதில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பெய்ஜிங்கிலிருந்து கடந்த 16 ஆம் நாள் புறப்பட்டு லத்தின் அமெரிக்க நாடுகளான ஈக்வேடார், பெரு, சிலி ஆகிய நாடுகளில் தனது பயணத்தை தொடங்கியுள்ளார். தொடர்ந்து ஏபெக் மாநாட்டிலும் பங்கேற்க உள்ளார், இந்த மாநாட்டில் சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங்கின் உரை பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது, ஏனெனில் தற்போதைய உலகப் பொருளாதாரச் சூழல் குறித்தும் வர்த்தகப் பாதுக்காப்புவாதம் குறித்தும் அவர் தனது கருத்துக்களை எடுத்துரைப்பார், அதே நேரத்தில் ஆசிய பசிபிக் பிரதேசப் பொருளாதாரத்தின் ஒருமைப்பாட்டுப் போக்கினை முன்னெடுப்பதிலும் சீனாவின் பங்கு இன்றியமையாதது, இத்தகைய அம்சங்கள் இம் மாநாட்டில் அதிக கவனத்தை ஈர்த்துவருகின்றன. சீன வெளியுறவுத் துறைத் துணை அமைச்சர் லீ பாவ்தொங்கும் ஆசிய பசிபிக் பிரதேச ஒத்துழைப்பை தொடர்ந்து முன்னேற்றிடவும் செழுமை ஆக்கிடவும் சீனாவின் பங்கு முக்கியமானது என்று தெரிவித்துள்ளார்.

ஏபெக் அமைப்பின் இந்த கூட்டத்தில் பங்கேற்கும் நாடுகள் தங்களுக்கிடையே உள்ள பொருளாதாரம் மற்றும் அடுத்த கட்ட வளர்ச்சி நிலை குறித்து விவாதிக்கும், சீனாவும் ஏபெக் அமைப்பின் அனைத்து முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆசிய – பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பின் வெற்றிகரமான மாநாடாக இந்த பெரு மாநாடு திகழும்.

சீன வானொலி தமிழ்ப் பிரிவின் செய்தியாளர் ப.சக்திவேல்

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040