In the West…"China" was ChangNan…it became the name of a country and a type of ceramic wares called china.
பழைய காலத்தில், சீனாவின் சாங்நான், "பீங்கானின் தலைநகர்" என்று கூறப்பட்டது. சாங்நானில் தயாரிக்கப்பட்ட பீங்கான், உள்நாட்டு மற்றும் உலகளவில் புகழ்பெற்றது. எனவே, மேலை நாடுகளில், "சீனா","சாங்நான்" இரு வார்த்தைகளுக்கு சமமாகும்.இந்நிலையில், "சீனா", ஒரு நாட்டின் பெயராக மாறியது. அத்துடன், பீங்கான் வகைப் பொருள், "சீனா" என அழைக்கப்பட்டது.
சீனாவின் பீங்கானின் தோற்றம் மற்றும் வளர்ச்சி வரலாறு,பீங்கான் கலச்சாரம் உள்ளிட்ட அம்சங்களை விபரமாக அறிய விரும்பினால், சீனாவின் ஜியங்சி மாநிலத்தின் ஜிங்தெசென் நகரிலுள்ள சீன பீங்கான் அருங்காட்சியகத்துக்கு செல்வது நல்ல தேர்வு.....