• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
"福"எழுத்துக்களை ஒட்டுவது பற்றிய பழைய வழக்கம்
  2017-02-01 13:35:45  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனப் புத்தாண்டு விழாவை முன்னிட்டு, மக்கள், தங்களது வீட்டில் "福"வடிவிலான எழுத்துக்களை ஒட்டுவது, பழைய வழக்கம். அதன் மூலம் புத்தாண்டில் நல்ல அதிர்ஷ்டங்கள் பெற முடியும் என்று சீன மக்கள் நம்புகின்றனர்.

இருப்பினும், வீட்டின் சில இடங்களில் இந்த எழுத்து தலைகீழாக காணப்படும். இதற்கு காரணம் என்ன?  தலைகீழ் என்று பொருள் உடைய சீன எழுத்தும், வருகை என்று பொருள் உடைய சீன எழுத்தும் ஒரே ஒலியில் உச்சரிக்கப்படும். எனவே, தலைகீழாக "福"எழுத்தை ஒட்டுவது, நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என்று கருதப்படுகிறது.

பழைய வழக்கங்களின்படி, வீட்டில் நுழையும் கதவில், "福"எழுத்தைத் தலைமேல் ஒட்ட வேண்டும். இவ்வாறு செய்வதற்கு நல்ல அதிர்ஷ்டத்தை வரவேற்பது என்று பொருள்.

வீட்டின் உள்புறத்தில் சமையலறை, ஜன்னல், பெட்டி, தண்ணீர் தொட்டி ஆகிய இடங்களில், "福"எழுத்தைத் தலைகீழாக ஒட்ட வேண்டும. இவ்வாறு செய்வதற்கு, நல்ல அதிர்ஷ்டம் வீட்டிற்குள் வரும் என்று பொருள்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040