சீனாவின் கான்சூ மாநிலத்தைச் சேர்ந்த 53 வயதான லியூ ச்சுவான், 30 ஆண்டுகளுக்கு முன், களிமண் சிற்பப் பணியில் ஈடுபட தொடங்கினார். அவர் களிமண்ணைப் பயன்படுத்தி, தனது குழந்தைக் கால கிராமவாழ்க்கை பற்றிய படைப்புகளைத் தயாரித்து வருகின்றார். வேளாண்மை பண்பாடு மற்றும் உள்ளூர் பழக்கங்களை வெளிப்படுத்தும் சிற்பங்களைத் தயாரிப்பது, அவரது முக்கிய நோக்கமாகும்.