அ. பட்டுப் தை பொருளாதார மண்டலம்
ஆ. 21ஆவது நூற்றாண்டின் கடல்வழி பட்டுப்பாதை
இ. புதிய பட்டுப்பாதை
2. "ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை" என்ற யோசனை எவ்வாறு முன்வைக்கப்பட்டது?
அ. 2013ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் நாள் சீன அரசு தலைவர் ஷிச்சின்பிங் கசகஸ்தானில் சொற்பொழிவு ஆற்றிய போது பட்டுப் பாதை பொருளாதார மண்டலத்தைக் கட்டியமைப்பதற்குரிய கோட்பாட்டை முன்வைத்தார்.
ஆ. 2013ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் நாள் சீன அரசு தலைவர் ஷிச்சின்பிங் இன்தோனேசியாவில் சொற்பொழிவு ஆற்றிய போது 21ஆவது நூற்றாண்டின் கடல்வழி பட்டுப்பாதையைக் கூட்டாகக் கட்டியமைப்பதற்குரிய கோட்பாட்டை முன்வைத்தார்.
3. "ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை" என்ற திட்டத்தின் ஒத்துழைப்பில் என்ன உட்படும்?
அ. கொள்கை பரிமாற்றம்
ஆ. வசதிகளின் கூட்டுப் பயன்பாடு
இ. வர்த்தக தடையின்மை
ஈ. நிதித்தொகைப் புழக்கம்
உ. பொது மக்களின் ஒரே விருப்பம்
4. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையைக் கட்டியமைக்கும் கோட்பாடு என்றால் என்ன?
அ. கூட்டு ஆலோசனை
ஆ. கூட்டுக் கட்டுமானம்
இ. கூட்டுப் பகிர்வு
5. "ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை" என்ற திட்டத்தின் சர்வதேசப் பொருளாதார இடைவழிகள் என்ன?
அ. சீனா-மங்கோலியா-ரஷியா
ஆ. புதிய ஆசிய-ஐரோப்பிய கண்டப் பாலம்
இ. சீனா-மத்திய ஆசியா-மேற்கு ஆசியா
ஈ. சீனா-பாகிஸ்தான்
உ. வங்காளத் தேசம்-சீனா-இந்தியா-மியன்மார்