13 அரச வம்சக்கால ஆட்சியின் தலைநகர் "சங் அன்"ஷான்சி மாநிலத்தில் இருந்த சங் அன் என்ற நகர்தான், சீனாவில் 13 வம்சக்கால ஆட்சிக்காலத்தின் தலைநகராக இருந்தது வந்தது. அது மட்டுமல்ல, இங்கிருந்துதான்,ஐரோப்பிய நாடுகளில் வணிகம் செய்வதற்குத் தொடக்கமான பட்டுப்பாதையும் ஆரம்பமானது. ஹன் வம்சத்தில் சங் அன் என்று இருந்த பெயர், சின் வம்சத்தில் மாற்றப்பட்டது. அதுவும்சங் அன் என்று அழைக்கப்பட்டாலும, அதில் பயன்படுத்தப்பட்ட சங் என்ற சீன மொழியின்எழுத்து வேறு பொருளுடையது. இந்த சங் அன் என்பதற்கு "நிலையான அமைதி" என்றுபொருள். இறுதியாக, மிங் வம்சத்தில் இது, 'சி அன்' என மீண்டும்மாற்றப்பட்டது. அதுதான் தற்போது வரையும் நீடித்துள்ளது. இதற்கு 'மேற்கத்தியஅமைதி' என்று பொருள்.ஆயிரம்ஆண்டுகளுக்கும் முந்தைய இந்த தலைநகரின் கட்டிங்களில் தற்போது சில சிதிலங்கள்மட்டுமே காலத்தின் சாட்சியாக நின்று கொண்டிருக்கின்றன. மாபெரும் அரண்மனைகளில்,பலம் பொருந்திய ஓர் அரசனின் கண்ணசைவுக்கு ஏவலர்கள் காத்திருந்த இப்பகுதி, இன்று பரந்துபட்ட மேய்ச்சல் நிலமாக மிக நிசப்தத்துடன் விரிந்து கிடக்கிறது.