• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு
  2017-06-05 19:57:45  cri எழுத்தின் அளவு:  A A A   

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு 2001ஆம் ஆண்டு ஜுன் 15ஆம் நாள் சீனாவின் ஷாங்காய் மாநகரில் அமைக்கப்பட்டது. இவ்வமைப்பு, சீனா, ரஷியா, கசகஸ்தான், கிர்கிஸ்தான், தாஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 6 உறுப்பு நாடுகளால் உருவாக்கப்பட்டது. மேலும், மங்கோலியா, பாகிஸ்தான், ஈரான், இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆகிய 5 பார்வையாளர் நாடுகளும், பெலாரஸ், இலங்கை, துருக்கி ஆகிய 3 கூட்டாளி நாடுகளும் இவ்வமைப்பில் இடம்பெறுகின்றன.

முன்னதாக, சீனா, ரஷியா, கசகஸ்தான், கிர்கிஸ்தான், தாஜிகிஸ்தான் ஆகிய 5 நாடுகளிடை பேச்சுவார்த்தை அமைப்பு முறையின் அடிப்படையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உருவாகியுள்ளது. 2001ஆம் ஆண்டு ஜுன் 14ஆம் நாள் நடைபெற்ற 6-வது பேச்சுவார்த்தையில், உஸ்பெகிஸ்தான் இப்பேச்சுவார்த்தை முறையில் சேர்ந்தது. அதையடுத்து, 6 நாடுகளின் தலைவர்கள் 15ஆம் நாள் முதலாவது பேச்சுவார்த்தை நடத்தி, ஷாங்காங் ஒத்துழைப்பு அமைப்பு உருவாக்கம் பற்றிய அறிக்கையில் கையெழுத்திட்டனர். அதில், ஷாங்காங் ஒத்துழைப்பு அமைப்பு அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்பட்டது என அறிவிக்கப்பட்டது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040