பிரிக்ஸ் நாடுகளின் தலைவர் பதவியை சீனா வகித்து வரும் காலத்தில் 2ஆவது பிரிக்ஸ் நாட்டு நிதி அமைச்சர் மற்றும் மத்திய வங்கித் தலைவர்கள் கூட்டம் 19ஆம் நாள் ஷாங்காய் மாநகரில் நடைபெற்றது. சீன நிதி அமைச்சர் சியௌஜியே, மக்கள் வங்கியின் துணைத் தலைவர் சென் யூலு ஆகியோர் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினர். இதர நாடுகளின் நிதி அமைச்சர்கள், மத்திய வங்கிகளின் உயர் அதிகாரிகள், புதிய வளர்ச்சி வங்கித் தலைவர் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
உலக மற்றும் பிரிக்ஸ் நாடுகளின் ஒட்டுமொத்த பொருளாதார நிலைமை, நிதித் துறை ஒத்துழைப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஒட்டுமொத்த பொருளாதாரக் கொள்கைகளின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, பிரிக்ஸ் நாடுகள் மற்றும் உலகப் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்புகள் தெரிவித்ததோடு, ஜி20 அமைப்பின் நிதி வழி மூலமான ஒத்துழைப்பை ஆழமாக்குவோம் என்றும் வாக்குறுதி அளித்துள்ளன.(வான்மதி)