5ஆவது பிரிக்ஸ் நாடுகளின் கல்வி அமைச்சர்கள் கூட்டம் 5ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. "பெய்ஜிங் கல்வி அறிக்கை" உள்ளிட்ட ஆவணங்கள் இக்கூட்டத்தில் கையொப்பமிடப்பட்டு, எதிர்காலத்தில் கல்வித் துறையில் பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பு பற்றி உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.
கல்வி துறையில் பிரிக்ஸ் நாடுகள் ஒன்றின் தேவையை மற்றது நிறைவு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. கல்வித் துறை ஒத்துழைப்புக்கு அதிக உள்ளார்ந்த ஆற்றல் உண்டு. பிரிக்ஸ் நாடுகள், திறப்பு, இணக்கம், ஒத்துழைப்பது மூலம் கூட்டு வெற்றி பெறுவது என்ற பிரிக்ஸ் எழுச்சியைப் பின்பற்றி, கல்வித்துறை ஒத்துழைப்புக்கான உள்ளடக்கத்தை அதிகரித்து, பிரிக்ஸ் நாடுகள் மேலும் நெருக்கமான, ஒற்றுமையான உறுதியான கூட்டாளியுறவை வளர்ப்பதற்கு இயக்கு ஆற்றலை வழங்க வேண்டும் என்று பிரிக்ஸ் நாடுகளின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கருத்து தெரிவித்தனர்.