இரண்டாவது பிரிக்ஸ் நாடுகளின் பண்பாட்டு அமைச்சர்கள் கூட்டம் 6ஆம் நாள் சீனாவின் தியன் ஜின் நகரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரிக்ஸ் நாடுகளின் பண்பாட்டுத்துறை பிரதிநிதிகள் உரை நிகழ்த்தி, எதிர்காலத்தில் பிரிக்ஸ் நாடுகளின் பண்பாட்டுத் துறை ஒத்துழைப்பு குறித்து கருத்து தெரிவித்தனர். கலை, மரபுச் செல்வம், பண்பாட்டுத் தொழில், புத்தாக்கம், செய்தி ஊடகம், வெளியீடு, ஆவணக்காப்பு, திறமைசாலி பயிற்சி உள்ளிட்ட துறைகள் இடம்பெறும் செயல் திட்டத்தில் அவர்கள் இக்கூட்டத்தில் கையொப்பமிட்டனர். இக்கூட்டத்தின் போது, பிரிக்ஸ் நாடுகளின் அருங்காட்சியக ஒன்றியம், நுண்கலை அரங்க ஒன்றியம் உள்ளிட்ட அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.