பிரிக்ஸ் நாட்டு சுகாதார அமைச்சர்களின் 7ஆவது மாநாடும் பாரம்பரிய மருத்துவம் பற்றிய உயர் நிலை கூட்டமும் தியன்ச்சின் மாநகரில் நடைபெற்று 6ஆம் நாள் அறிக்கை ஒன்றை வெளியிட்டன. உலக சுகாதார மேலாண்மை துறையில் பிரிக்ஸ் நாடுகளின் பங்கை அதிகரிப்பது, சுகாதார கட்டமைப்பை மேம்படுத்தும் அனுபவங்களையும் சுகாதார சேவை தரத்தை உயர்த்தும் அனுபவங்களையும் செயலாக்க முறையில் பகிர்ந்து கொள்வது, உடல்நலம் தொடர்பான தொடரவல்ல வளர்ச்சி இலக்கை நனவாக்குவது ஆகியவை இக்கூட்டறிக்கையின் நோக்கமாகும்.
பாரம்பரிய மருத்துவத் துறையில் பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் கூட்டறிக்கையும் அதே நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.