7ஆம் நாள் ஜெர்மன் நகர் ஹெம்பர்கில் நடைபெற்ற பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்ற சந்திப்புக்குச் சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின் பிங் தலைமை தாங்கினார். தென்னாப்பிரிக்க அரசுத் தலைவர் சூமா, பிரேசில் அரசுத் தலைவர் மிஷேல் தெமெர், ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புத்தின், இந்திய தலைமை அமைச்சர் மோடி ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். அப்போது, உலக அரசியல் பொருளாதார நிலைமை குறித்து, பல்வேறு தலைவர்களும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
(கலைமணி)