2017-ஆம் ஆண்டு பிரிக்ஸ் நாடுகளின் விளையாட்டுப் போட்டிக்கான பல்வேறு ஆயத்தப் பணிகளும் முடிக்கப்பட்டு, ஜுன் 17-ஆம் நாள் சீனாவின் குவாங் சோ நகரில் நடைபெற துவங்கியது.
16-ஆம் நாள் இந்நகரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், சீன விளையாட்டுத் தலைமைப் பணியகத்தின் அதிகாரி யாங் சென் தெ கூறுகையில், பிரிக்ஸ் நாட்டு விளையாட்டுப் போட்டியை நடத்துவது, 2016-ஆம் ஆண்டில் நடைபெற்ற கோவா உச்சி மாநாட்டில் உருவாக்கப்பட்டுள்ள முக்கிய பொது கருத்து ஆகும் என்றார். நடப்பு விளையாட்டுப் போட்டி, இவ்வாண்டு பிரிக்ஸ் நாடுகள் ஒத்துழைப்பு மேற்கொள்வதில் கவனத்துக்குரிய அம்சமாகும். பிரிக்ஸ் நாடுகளின் விளையாட்டு மற்றும் மானிடவியல் ஒத்துழைப்பை இது முன்னேற்றும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.(தேன்மொழி)