• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[நாட்டின் நிலப்பரப்பு]
நாட்டின் நிலப் பரப்பு

சீனா என்பது சீன மக்கள் குடியரசின் சுருக்கமான பெயராகும். அது ஆசிய கண்டத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. அதன் நிலப்பரப்பு 96 லட்சம் சதுர கிலோமீட்டராகும். ஆசியாவில் அது மிகப் பெரிய நாடாகும். உலகில் ரஷியா கனடா ஆகிய நாடுகளை அடுத்து அது மூன்றாவது பெரிய நாடாகும்.

சீனாவின் உரிமைப் பிரதேசமானது வடக்கில் மோஹொ ஆற்றின் வட்க்கிலுள்ள ஹெலுங் ஆற்றின் மையத்திலிருந்து (வட அகலக்கோட்டில் 53.30 பாகை)தெற்கில் நான்சா தீவுக் கூட்டத்தின் தெற்கு முனையான சென்மு ஆண்சா வரை (வட அகலக் கோட்டில் 4 பாகை)தெற்கு வடக்காக சுமார் 5500 கிலோமீட்டராகும். கிழக்கில் ஹெலுங் ஆறும் உசுலி ஆறும் சங்கமிக்கும் இடத்திலிருந்து (கிழக்கு நெடுங்கோட்டில் 135.05 பாகை)மேற்கில் பாமிர் பீடமூமி வரை (கிழக்கு நெடுங்கோட்டில் 73.4 பாகை)கிழக்கு மேற்காக சுமார் 5000 கிலோமீட்டராகும்.

சீன எல்லையின் நீளம் சுமார் 22 ஆயிரத்து 800 கிலோமீட்டராகும். அதன் கிழக்கில் வட கொரியாவும் வடக்கில் மங்கோலியாவும் உள்ளன. வடகிழக்கில் ரஷியா, வட மேற்கில் கசாக்கிஸ்தான், கீர்கிஸ்தான், தாஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. மேற்கிலும் தென் மேற்கிலும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளும் தெற்கில் மியன்மர், லாவோஸ், வியட்நாம் ஆகிய நாடுகளும் உள்ளன. கடலுக்கப்பால் கிழக்கிலும் தென்கிழக்கிலும் தென் கொரியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், புருனை, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் உள்ளன.

1 2 3 4 5 6
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040