• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[நாட்டின் நிலப்பரப்பு]

தேசியக் கோடி, தேசிய சினை, நாட்டுப்பண், தலைநகர்

[தேசியக் கொடி]:

தேசியக் கொடி, தேசிய சினை, நாட்டுப் பண், தலைநகர்

5 நட்சத்திரங்களுடைய செங்கொடி, சீன மக்கள் குடியரசின் தேசிய கொடியாகும். நீளத்துக்கும் அகலத்துக்குமிடை நிகிதாசாரம் 3:2 ஆகும். அதன் சிவப்பு நிறமானது புரட்சியைக் குறிக்கிறது. கொடியின் மேல் உள்ள 5 கோண நட்சத்திரங்கள் மஞ்சள் நிறமுடையவை. 4 சிறிய நட்சத்திரங்களின் நுனி பெரிய நட்சத்திரத்தை சூழந்திருக்கின்றன. கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான புரட்சிகர மக்களின் பெரும் ஒற்றுமையை இது எடுத்துக் காட்டுகின்றது.

 

[தேசிய இலட்சினை]

சீன மக்கள் குடியரசின் தேசிய இலட்சினை: தேசிய கொடி, சியன் ஆன் மென் வாயிற்கோபுரம், சக்கரம், கோதுமை கதிர் ஆகியவை இதில் இடம் பெறுகின்றன. சீன மக்கள் "மே 4"இயக்கம் முதல் நடத்தி வரும் புதிய ஜனநாயக புரட்சி போராட்டத்தையும் தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையிலான தொழிளாளர் விவசாயிகள் தோழமையை அடிப்படையாகக் கொண்ட மக்கள் ஜனநாயக சர்வாதிகார நவ சீனாவின் பிறப்பையும் இவை காட்டுகின்றன.

[நாட்டுப் பண]

சீன மக்கள் குடியரசின் நாட்டுப் பண்: "தொண்டர் படையின் அணி வகுப்பு இசை" என்பது அதன் பெயராகும். அது 1935ம் ஆண்டில் இயற்றப்பட்டது. நாடக ஆசிரியர் தியென் ஹான் இந்தப் பாடலை எழுதினார். சீன புதிய இசை இயக்கத்தின் நிறுவனர் நியென் ழெ இசை அமைத்தார். இப்பாடல் முன்பு "கொந்தளிப்பான நிலைமையில் புதல்வ புதவிகள்"எனும் திரைப்படத்தின் தலைப்பு பாடலாகும். "செப்டம்பர் 18"நிகழ்ச்சிக்குப் பின் ஜப்பான் வடகிழக்கு சீனாவின் மூன்று மாநிலங்களைக் கைப்பற்றியது. சீன தேசியம் அபாயகரமான ஜீவ மரண தருணத்தில் இருந்தது. அறிவாளர்கள் பலர் ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்பு போர் முனைக்குச் துணிவுடன் சென்றனர். இது தான் இத்திரைப் படத்தின் உள்ளடக்கமாகும். திரைப்படத்துடன் குறிப்பாக நாட்டைக் காப்பாற்றும் இயக்கத்தின் பரவலுடன் இப்பாடல் நாட்டின் மூலை முடுக்குகளிலும் பரவியது. சீனத் தேசிய விடுதலையின் ஊது குழலாக இது அழைக்கப்பட்டது.

1949ம் ஆண்டு செம்டம்பர் 27ம் நாள் நடைபெற்ரற சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் முதலாவது முழு அமர்வில் ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டது. அதாவது சீன மக்கள் குடியரசின் நாட்டுப் பண் அதிகாரப்பூர்வமாக இயற்றப்படும் முன் "தொண்டர் படையின் அணி வகுப்பு இசை"என்ற பாடல் நாட்டுப் பண்ணாக நிர்ணயிக்கப்பட்டது. 2004ம் ஆண்டு மார்ச் 14ம் நாள் சீனாவின் 10வது தேசிய மக்கள் பேரவையின் 2வது கூட்டத்தொடரில் அங்கீரிக்கப்பட்ட அரசியல் அமைப்பு சட்டத்திருத்தம், "தொண்டர் படையின் அணி வகுப்பு இசை"என்ற பாடலை சீன மக்கள் குடியரசின் நாட்டுப் பண்ணாக வகுத்திருக்கின்றது.

இப்பாடல் வரிகள் வருமாறு:

"அடிமையாக வாழ மறுக்கும் மக்களே!

பொங்கி எழுவீர்!

நமது ரத்தத்தாலும் சதையாலும்

புதியதோர் நெடுஞ்சுவரைக் கட்டியெழுப்புவோம்!

மிக அபாயகரமான தருணத்தில் இன்னல்படுகின்றது நமது சீன நாடு இறுதிப்போர் முழக்கம் இடவே

நாம் அனைவரும் எழுவோம், எழுவோமே!

பகைவனின் பீரங்கிச் சூட்டையும் பொருட்படுத்தாது

நாம் அனைவரும்

ஒருமனப்பட்டு-முன்னேறுவோம்!

முன்னேறுவோம்!"

தலைநகர்:

சீன மக்கள் குடியரசின் தலைநகர்: பெய்சிங் சீன மக்கள் குடியரசின் தலைநகராகும்

 

1949ம் ஆண்டு சப்டெம்பர் 29ம் நாள் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு சீனத் தேசிய மக்கள் பேரவையின் அதிகாரத்தைச் செயல்படுத்துவதாக அறிவித்த பின் "சீன மக்கள் அரசியல் கலந்தாய்வின் பொது செயல் திட்டத்தை"ஒருமனதாக அங்கீகரித்தது. சீன மக்கள் குடியரசின் மத்திய அரசாங்கம் நிறுவப்பட்டுள்ளதாக தலைவர் மா சே துங் அக்டோபர் 1ம் நாள் தியென் ஆன் மென் வாயிற்கோபுரத்தில் அனைத்துலகிற்கும் கம்பீரமாக பிரகடனம் செய்தார். அப்போது முதல் நவ சீனாவின் தலைநகரான பெய்சிங் குடியரசுடன் சேர்ந்து சீன தேசத்தின் நீண்டகால வரலாற்றில் புத்தம் புதிய பக்கம் ஒன்றை திறந்து வைத்துள்ளது.

1 2 3 4 5 6
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040