• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[நாட்டின் நிலப்பரப்பு]

ஆறுகள்

சீனாவில் நிறைய ஆறுகள் உள்ளன. ஆயிரம் சதுர கிலோமீட்டருக்கு அதிகமான வடி நிலங்களைக் கொண்டிருக்கும் ஆருகளின் எண்ணிக்கை 1500க்கும அதிகமாகும். உள்புற ஆறு எனவும் வெளிப் புற ஆறு எனவும் வகைப்படுகின்றன. கடலுக்குள் செல்லும் வெளியுற ஆறுகின் பரப்பளவு நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 64 விழுக்காடு வகிக்கின்றது. யாங்சி ஆறு, மஞ்சள் ஆறு, ஹெலுங் ஆறு, முத்து ஆறு, லியௌ ஆறு, ஹைய் ஆறு முதலியவை கிறக்கு நோக்கிச் சென்று பசிபிக் மாக் கடலில் கலக்கின்றன. திபெத்தின் யாலு சாங்பு ஆறு இந்துமாக் கடலில் கலக்கின்றது. அது 504.6 கிலோமீட்டர் நீளமுடையதும் 6009 மீட்டர் ஆழமும் உடைய யாலு சங்பு எனப்படும் உலகில் முதலாவது பெரிய பள்ளத்தாக்கின் ஊடாக அது பாய்ந்தோடுகின்றது. சிங்சியாங்கின் அர்சிஸ் ஆறு வடக்கு நோக்கிப் பாய்ந்து ஆர்திக் மாக்கடலில் வீழ்கின்றது. நிலம் சூழ்ந்த ஏரிகளுக்குள் செல்லும் அல்லது பாலைவனத்திலும் உப்பு மணலிலும் மறைந்திருக்கும் உட்புற ஆறுகளும் உள்ளன. இவை நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 36 விழுக்காடு வகிக்கும் வடி நிலங்களைக் கொண்டிருக்கின்றன.

யாங்சி ஆறு சீனாவின் மிகப் பெரிய ஆறாகும். 6300 கிலோமீட்டர் நீளமுடையது. ஆப்பிரிக்காவின் நைல் ஆற்றையும் தென் அமெரிக்காவின் அமேஸான் ஆற்றையும் அடுத்து உலகில் 3வது பெரிய ஆறாகும். அதன் மேல் பகுதி உயர் மலைகளுக்கு ஆழமான பள்ளத்தாக்குகளுக்கும் ஊடாக ஓடுவதால் அதற்கு செழுமையான நீர் வளம் உண்டு. சீனாவின் கிழக்குப் பகுதியிலும் மேற்குப் பகுதியிலும் உள்ள னீர் போக்குவரத்தின் பெரும் உயர் நாடியாக அது திகழ்கின்றது. இயற்கை ஆறுகள் சிறந்து விளங்குவதால் "தங்க நீர்ப் பாதை"என அது பெயர் பெற்றது. யாங்சி ஆற்றின் நடுத்தர மற்றும் கீழ்ப் பகுதி பிரதேசத்தில் கால நிலை மிதமானது, ஈரமானது. மழை வளமும் நில வளமும் அதற்கு உண்டு. இங்குத் தொழிற்துறையும் வேளாண் தொழிலும் வளர்ச்சி கண்டுள்ளன.

5464 கிலோமீட்டர் நீளமுடைய மஞ்சள் ஆறானது சீனாவின் 2வது பெரிய ஆறாகும். மஞ்சள் ஆற்றுப் பள்ளத்தாக்கில் செழுமையான மேய்ச்சல் நிலம் உண்டு. செழிப்பான தாதுவளங்களும் புதைந்து கிடககின்றன. சீனாவின் பண்டைக்கால நாகரிகத்தின் முக்கிய பிறப்பிடங்களில் ஒன்றாக அது விளங்குகின்றது.

ஹெலுங் ஆறு வட சீனாவின் பெரிய ஆறாகும். அது 4350 கிலோமீட்டர் நீளமுடையது.

தென் சீனாவின் மிகப் பெரிய ஆறான முத்து ஆற்றின் நீளம் 2214 கிலோமீட்டராகும்.

சிங்சியாங்கின் தென் பகுதியிலுள்ள தரிம் ஆறானது 2179 கிலோமீட்டர் நீளமுடையது. சீனாவின் மிக நீளமான நிலம் சூழ்ந்த ஆறு அது.

தவிர சீனாவில் புகழ் பெற்ற செயற்கை ஆறு ஒன்றும் உள்ளது. தெற்குப் பகுதி மற்றும் வடக்குப் பகுதியின் குறுக்கே செல்லும் பெரிய கால்வாய் அது. கி.பி.5ம் நூற்றாண்டில் அது அமைக்கப்பட்டது. வடக்கில் பெய்சிங்கிலிருந்து துவங்கி தெற்கில் கிழக்குச் சீனாவின் செச்சியாங் மாநிலத்து ஹான்சோ நகரை அடைகின்றது. ஹைய் ஆறு, மஞ்சள் ஆறு, உவாய் ஆறு, யாங்சி ஆறு, சியென் தான் ஆறு ஆகிய 5 ஆறுகளை அது ஒன்றிணைத்துள்ளது. 1801 கிலோமீட்டர் நீளமுடைய கால்வாய் உலகில் மிக முன்னதாக அமைக்கப்ட்ட மிக நீளமான செயற்கை ஆறாகும்.


1 2 3 4 5 6
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040