|
![]() |
மலைகள்
சீனாவின் உயர் மலைத் தொடர்கள் சீனாவின் நிலவமைப்பில் ஓர் எலும்பு வடிவமாக அமைந்துள்ளன. இமாலய மலைகள், குன்லன் மலைகள், தியென் சான் மலை, தாங்குலா மலை தொடர், சின்லின் மலைகள், பெரும் சிங் ஆன் லின் மலைகள், தைய்ஹான் மலைகள், சிலியென் மலை, ஹென்துவான் மலை முதலியவை சீனாவின் புகழ் பெற்ற மலைத் தொடர்களாகும்.
இமாலய மலைகள்: சீனாவுக்கு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான எல்லையில் பிறை வளைவு வடிவில் இவை அமைந்துள்ளன. இவை கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 6000 மீட்டர் உயரத்தில் உள்ளன. மொத்தம் 2400 கிலோமீட்டர் நீளமுடைய இம்மலைகள், உலகில் மிக உயரமான மலைகளாகும். முதன்மை சிகரம் ஜொல்மோ லுங்மா(எவரைஸ்ட்),கடம மட்டத்திலிருந்து 884.13 மீட்டர் உயரம் உடையது. இது உலகில் மிக உயர்ந்த மலைச் சிகரமாகத் திகழ்கின்றது.
குங்லுங் மலைகள்: மேற்கில் மீர் பீடபூமியிலிருந்து தொடங்கி கிழக்கு நோக்கி செச்சுவான் மாநிலத்தின் வடமேற்குப் பகுதி வரை இவை செல்கின்றன. 2500 கிலோமீட்டர் நீளம் உடையவை. கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 5000-7000 மீட்டர் உயரத்தில் உள்ளன. கொங்கல் மலை, கடல் மட்டத்திலிருந்து 7719 மீட்டர் உயரத்தில் உள்ளது.
தியென்சான் மலைகள்: வட மேற்கு சீனாவின் சிங்சியான் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் மத்திய பகுதியின் குறுக்கே செல்லும் இம்மலைகள் சராசரியாக கடல் மட்டத்திலிருந்து 3000-5000 மீட்டர் உயரத்தில் உள்ளன. மிக உயரமான சிகரமான தோமுர் சிகரம் கடல் மட்டத்திலிருந்து 7455.3 மீட்டர் உயரமுடையது.
தாங்குலா மலைகள்: சிங்காய்-திபெத் பீடபூமியின் நடுப்பகுதியில் அமைந்துள்ள இம்மலைகள் கடல் மட்டத்திலிருந்து 6000 மீட்டர் உயரத்தில் உள்ளன. மிக உயர்ந்த சிகரமான கர்தான்தொங் சிகரம் கடல் மட்டத்திலிருந்து 6621 மீட்டர் உயரத்தில் இருக்கின்றது. சீனாவின் மிக நீளமான ஆற்றான யாங்சி ஆற்றின் ஊற்று மூலமாகும்.
சிங்லின் மலைகள்ச மேற்கில் கான் சு மாநிலத்தின் கிழக்குப் பகுதியிலிருந்து துவங்கி கிழக்கில் ஹோனான் மாலிலத்தின் மேற்குப் பகுதி வரை இம்மலைகள் பரந்து கிடக்கின்றன. கடல் மட்டத்திலிருந்து 2000-3000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளன. தலைமைச் சிகரம் தைய்பைய் மலை, கடல் மட்டத்திலிருந்து 3767 மீட்டர் உயரத்தில் உள்ளது. இது தென் சீனாவுக்கும் வடக்கு சீனாவுக்குமிடையிலான ஒரு முக்கியமான புவியியல் எல்லைக் கோடாகும்.
பெரும் சின் அன் லின் மலைகள்: வடக்கில் வடகிழக்குச் சீனாவின் ஹெய்லுங்சியாங் மாநிலத்தின் மோஹொ ஆற்றின் அருகில் தொடங்கி தெற்கில் பழைய ஹா ஹோ ஆற்றின் மேல் பகுதி வரை பரவிக் கிடக்கும் இம்மலைகள், தெற்கு வடக்காக மொத்தம் 1000 கிலோமீட்டர் தொலைவு செல்கின்றன. இவை கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டம் உயரத்தில் அமைந்துள்ளன. தலைமைச் சிகரமான குவாஹ்காங்லியான் கடல் மட்டத்திலிருந்து 2029 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
தைய்ஹான் மலைகள்: வடக்கிலிருந்து தொடங்கி தெற்கு நோக்கிச் செல்லும் இம்மலைகள் லோயெஸ் மீடபூமியின் கிழக்கு ஓரத்தில் அமைந்துள்ளன. தெற்கிலிருந்து வடக்காக மொத்தம் 400 கிலோமீட்டர் நீளமுடையவை. கடல் மட்டத்திலிருந்து 1500-2000 மீட்டர் உயரத்தில் உள்ளன. தலையாய. சிகரமான சியௌவுதாய்சான் மலை, கடல் மட்டத்திலிருந்து 2882 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
சிலியன் மலைகள்: சிங்காய்-திபெத் பீடபூமியின் வடகிழக்கு ஓரத்தில் அமைந்துள்ள இம்மலைகள் கடல் மட்டத்திலிருந்து 4000 மீட்டர் உயரத்தில் உள்ளன. இவற்றின் தலையாய சிகரம் கடல் மட்டத்திலிருந்து 5547 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
தைவான் தீவின் கிழக்குப் பகுதியில் நெடுக்காகச் செல்லும் இம்மலைகள் கடல் மட்டத்திலிருந்து 3000-3500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளன. தலைமைச் சிகரமான யுசா கடல் மட்டத்திலிருந்து 3952 மீட்டர் உயரத்தில் உள்ளது.
தவிர, குவான் சா மலை, தைய் மலை., குவாசான் மலை, சொன்சான் மலை, ஹென்சான் மலை, ஓமெய் மலை, சான் மலை, வூதாங் மலை, யென்தான் மலை முதலிய புகழ் பெற்ற மலைகள் சீனாவில் உண்டு.
ஹன் துவான் மலைகள்: சிங்காய்-திபெத் பீடபூமியின் தென்மேர்கிலும் திபெத் தன்னாட்சிப் பிரதேச சுவான் யுன்னான் மாநிலங்கள் இணையும் இடத்திலும் அமைந்துள்ள இம்மலைகள் கடல் மட்டத்திலிருந்து 2000-6000 மீட்டர் அயரத்தில் உள்ளன. மிக உயரமான சிகரமான கொங்கா, கடல் மட்டத்திலிருந்து 7556 மீட்டர் உயரத்தில் உள்ளது.
தவிர, குவான் சா மலை, தைய் மலை., குவாசான் மலை, சொன்சான் மலை, ஹென்சான் மலை, ஓமெய் மலை, சான் மலை, வூதாங் மலை, யென்தான் மலை முதலிய புகழ் பெற்ற மலைகள் சீனாவில் உண்டு.
|