• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[நாட்டின் நிலப்பரப்பு]

கடலோரமும் தீவுகளும்

சீனாவின் கடலோரம் வடக்கில் லொனின் யாலு ஆற்று முகத் துவாரத்திலிருந்து தொடங்கி தெற்கில் குவான் சியின் பெய்லுன் ஆற்றும் முகத்துவாரம் வரை செல்கின்றது. மொத்த நீளம் 18 ஆயிரம் கிலோமீட்டராகும். கலையோரம் சமதனமாக உள்ளது. பல தலைசிறந்த துறைமுகங்கள் அதற்கு உண்டு. போஹாய் கடல் மஞ்சள் கயல் கிழக்கு சீனக் கடல் தென் சீன கடல் தைவானுக்கு கிழக்கிலுள்ள பசிபிக் மாக்கடல் பிரதேசம் ஆகியவை சீனாவின் 5 பெரிய அண்மைக் கடல் பிரதேசங்களாகும். இவற்றில் போஹாய் கடல் சீனாவின் உள் கடலாகும். தைவானுக்கு கிழக்கிலுள்ள பசிபிக் மாகடல் பிரதேசம் வடக்கில் ஜப்பானின் லியூ சியூ தீவுக் கூட்டத்தின் சியென் தௌ தீவுக் கூட்டத்திலிருந்து தொடங்கி தெற்கில் பாஸ் நீரிணை வரை பரந்து கிடக்கின்றது.

சீனாவின் கடல் பரப்பின் மொத்த பரரப்பளவு 3 லட்சத்து 80 ஆயிரம் சதுர கிலோமீட்டராகும். சீனாவின் உள் நீர் பரப்பானது சீனாவின் உரிமை கடல் எல்லையின் அடிப்படை கோட்டுக்கும் பெரும் நிலத்தை நோக்கிச் செல்லும் கரையோரத்துக்கும் இடை கடல் பரப்பை குறிக்கின்றது. சீன உரிமைக் கடல் எல்லை அதன் அடிப்படைக் கோட்டிலிருந்து தொடங்கி 12 கடல் மைல் அகலமுடையது.

சீனாவின் கடல் பரப்பில் 5000க்கும் அதிகமான தீவுகள் உண்டு. அவற்றின் மொத்த நிலப்பரப்பு 80 ஆயிரம் சதுர கிலோமீட்டராகும். தீவுகளின் கடலோர நீளம் 14 ஆயிரம் கிலோமீட்டராகும். இவற்றில் மிகப் பெரிய தீவான தைவானின் நிலப்பரப்பு 36 ஆயிரம் சதூர கிலோமீட்டராகும். அதை அடுத்து ஹைனான் தீவின் நிலப்பரப்பு 34 ஆயிரம் சதூரக் கிலோமீட்டராகும். தைவான் தீவுக்கு வடகிழக்கு கடல் பரப்பில் அமைந்துள்ள தியௌ யூ தீவு ச்சு வெய் யு தீவு சீனாவின் கிழக்கிலுள்ள தீவுகளாகும். தென் சீனக் கடலில் பரந்து கிடக்கும் தீவுகள் கடற்பாறைகள் சிறு திட்டுக்கள் ஆகியவை சீனாவின் தெற்கிலுள்ள தீவு கூட்டமாகும். தெந் சீனக் கடல் தீவுகள் என்பது அதன் பெயர். வெவ்வேறான நில அமைப்பில் அமைந்துள்ள தீவுகள் முறையே தொன் சா தீவுகள், சிசா தீவுகள், சொங்சா தீவுகள், நான் சா தீவுகள் எனவும் அழைக்கப்படுகின்றன.

1 2 3 4 5 6
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040