|
![]() |
சீனா பரந்துபட்ட நிலப்பரப்புடையதால் அது பல்வகை நிலங்களைக் கொண்டிருக்கின்றது. விளை நிலம், வனப் பிரதேசம், மேய்ச்சல் நிலம், பாலைவனம், மணல் பிரதேசம் ஆகியவை சீனாவில் அதிக அளவில் பரந்து கிடக்கின்றன. சீனாவில் மலைப் பிரதேசங்கள் அதிகம். சமவெளிகள் குறைவு. விளை நிலமும் வனப் பிரதேசமும் குறைவு. பல்வகை நிலவளம் சராசரியாக பரவிக் கிடக்க வில்லை. விளை நிலங்கள் முக்கியமாக கிழக்குப் பகுதியின் பருவ காற்றுடைய சமவெளி பிரதேசங்களிலும் வடி நிலப் பிரதேசங்களிலும் செறிந்து கிடக்கிடக்கின்றன. வனப் பிரதேசஹ்கள் வடகிழக்கு மற்றும் தென் மேற்குப் பகுதிகளிலுள்ள ஒதுக்குப் புறமான மலைப் பிரதேசங்களில் அமைந்துள்ளன. சதுப்பு நிலமானது நிலம் சூழ்ந்த பீடபூமிகளிலும் மலைப் பிரதேசங்களிலும் பரந்து கிடக்கின்றன.
விளை நிலம்:
சீனாவில் தற்போது 12 லட்சத்து 70 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவுடைய விளை நிலம் உணஅடு. கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் விளை நிலம் குறைவு. இவை ஒவ்வொன்றும் 28.4 விழுக்காடு வகிக்கின்றன. நடுப் பகுதி பிரதேசத்திலான விளை நிலம் 43.2 விழஉக்காடு வகிக்கின்றது.
வடகிழக்குச் சமவெளி, வட சீன சமவெளி, யாஞாசி ஆற்றின் நடுத்தர கீழ்ப் பகுதி சமவெளி, முத்து ஆர்றுக் கழிமுகம், சிச்சுவான் வடிநிலம் ஆகிய பிரதேசங்களில் விளை நிலம் போதிய அளவு செறிந்து கிடக்கின்றது. வட கிழக்குச் சமவெளியின் கறுப்பு மண் வளமுடையது. இங்கு கோதுமை மக்காச் சோளம், சீனச் சோளம், சோயா அவரை, லெஃக்ஸ் எனும் ஒரு வகை சணல், சர்க்கரைக் கிழங்கு முதலியவை விளைகின்றன. வட சீன சமவெலியின் மண் வளமுடையது. இங்கு கோதுமை, மக்காச் சோளம், தினை, சீனச் சோளம், பருத்தி, நிலக் கடலை முதலியவை விளைகின்றன. யாஞ்சி ஆற்றின் நடுத்தர மற்றும் கீழ்ப் பகுதி சமவெளியில் நெல், தோடம் பழம், ஆரஞ்சு, எண்ணெ வித்து முதலியவை விளைகின்றன. சிச்சுவான் வடி நிலத்தில் நெல், எண்ணெய் வித்து, கரும்பு, தேயிலை, தோடம் பழம், ஆரஞ்சு, கொடி முந்திரி முதலியவை செழிப்பாக வளர்கின்றன.
காடுகள்:
சீனா தற்போது 15894 ஹெக்டர் நிலப்பரப்புடைய காடுகளைக் கொண்டிருக்கின்றது. அதன் பரப்பு, 16.55 விழுக்காடு மட்டுமே. காடுகள் குறைவாக உள்ள நாடு சீனா. இலகில் 30.8 விழுக்காடு என்ற வனப் பரவல் விகிதாராரத்துடன் ஒப்பிடுகையில் சீனாவில் காடுகள் மிகக் குறைவு என்று கூறலாம். சீனாவின் இயற்கை காடுகள் பெரும்பாலும் வடகிழக்கு மற்றும் தென்மேற்குப் பிரதேசங்களில் பரந்து கிடக்கின்றன. மக்கள் தொகை நெருக்கமாக உள்ள பொருளாதார வளர்ச்சிமிக்க கிழக்கு சமவெளியிலும் பரந்துபட்ட வடமேற்கு பிரதேசத்திலும் கூடுகள் மிகவும் குறைவு.
எனினும் சீனாவில் மர வகைகள் அதிகம். 2800 வகைகளுக்கு மேர்பட்ட மரங்கள் அதற்கு உண்டு. சிங்கோ மரம், சியுஐசான் மரம் உள்ளிட்ட மதிப்பிடற்கரிய மரங்கள் உண்டு. சுற்றுச் சூழலைப் பேணிக்காத்து பொருளாதாரக் கட்டுமானத்தின் தேவையை நிறைவு செய்யும் பொருட்டு சீனாவில் மரஹ்களை நட்டு காடு வளர்ப்பு இயக்கம் தொடர்ந்து பெருமளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது வரை சீனாவில் செயற்கை காடு வளர்ப்பு பிரதேசம் 3 கோடியே 37 ல்டசத்து 90 ஆயிரம் ஹெக்டோரை கொண்டிருக்கின்றது. உலகில் செயற்கை காடு வளர்ப்பு பரப்பலவில் மிகப் பெரிய நாடாக சீனா திகழ்கின்றது. சீனாவின் முக்கிய வனப் பிரதேசங்கள் வருமாறு:
வட கிழக்கு சீன வனப் பிரதேசம். இதில் பெரும் சின் அன் மர்றும் சிறிய சின் அன் லின் மலைப் பிரதேசஹ்கள், சான் பைய் சான் மலைப் பிரதேசம் உள்ளடங்குகின்றன. இவை சீனாவின் மிகப் பெரிய இயற்கை வனப் பிரதேசங்களாகும். ஹென்துவான் மலைப் பிரதேசம், இமாலய மலைகள், யாலுசான்பு ஆறு வளையும் இடம் உள்ளிட்ட தென் மேற்கு சீன வனப் பிரதேசமானது சீனாவின் இரண்டாவது பெரிய இயற்கை வனப் பிரதேசமாகத் திகழ்கின்றது. சின் லின் மலைகள், குவாய் ஹொ ஆற்றுக்கு தெற்கிலும் யுன்னான்-குய்சோ பீடபூமிக்குக் கிழக்கிலுள்ள பரந்துபட்ட குன்று பிரதேசமும் சீனாவின் மிக முக்கியமான செயற்கை வழ பாதுகாப்புப் பிரதேசங்களாகும். அன்றி பரந்துபட்ட வனப் பாதுகப்பு மண்டல அமைப்பும் சீனாவுக்கு உண்டு. எடுத்துக் காட்டாக சடீனாவின் வட கிழக்கு, வடக்கு, வட மேற்கில் பரவிக் கிடக்கும் வனப் பாதுகாப்பு மண்டலத்தின் நீளம் 7000 கிலோமீட்டருக்கும் அதிகமாகும். அது 26 கோடி ஹெக்டர் பரப்பளவைக் கொண்டிருக்கின்றது. இது நாட்டின் நிலப் பகுதியின் மொத்த பரப்பில் 25 விழுக்காடாகும். உலகில் மாபெரும் உயிரின வாழ்க்கை சூழல் திட்டப் பணியென இதுவும் அழைக்கப்படுகின்றது.
மேய்ச்சல் நிலம்:
சீனாவில் 26 கோடியே 60 லட்சத்து 60 ஆயிரம் ஹெக்டர் மேய்ச்சல் நிலம் காணப்படுகின்றது. இவை பல்வகைப் பட்டவை. பல்வகை கால்நடைகள் வெவ்வேறான பருவகாலங்களில் மேய்வதற்கு இவை ஏற்றவை. இவற்றின் மொத்த நிலப்பரப்பு நாட்டின் மொத்த நிலப்பரத்தில் நான்கில் ஒரு பகுதியாகும். உலகில் மிகப் பெரிய நிலப் பரப்புடைய மேய்ச்சல் நிலத்தைக் கொண்டிருக்கும் நாடுகளில் சீனா ஒன்றாகும். பெரும் சின் அன் மலைகள் ஆகியவற்றுக்கு மேற்கிலும் வடக்கிலும் உள்ள பரந்துபட்ட பிரதேசங்களில் இயற்கை மேய்ச்சல் நிலம் முக்கியமாக பரவிக் கிடக்கின்றது. செயற்கை மேய்ச்சல் நிலம் முக்கியமாக சீனாவின் தென் மேற்குப் பிரதேசத்தில் விளை நிலம் வனப் பிரதேசங்களுடன் இணைந்து குறுக்கும் நெடுக்குமாக பரவிக்கிடக்கின்றன.
முக்கியமான கால்நடை வளர்ப்புப் பிரதேசங்கள் வருமாறு:சீனாவின் மிகப் பெரிய கால்நடை வளர்ப்புப் பிரதேசம் உள் மங்கோலிய கால்நடை வளர்ப்பு பிரதேசமாகும். சான் ஹொகுதிரை சான் ஹொ மாடு உள்ளிட்ட தலைசிறந்த கால்நடை இனங்கள் வளர்கின்றன. சிங்சியான் கால்நடை வளர்ப்புப் பிரதேசத்தில் சிங்சியான் மென் ரோம ஆடு, அல்தாய் பெரும் வால் ஆடு, இலி குதிரை உள்ளிட்ட தலைசிறந்த இனக் கால்நடைகள் உள்ளன. சிங்காய் கால்நடை வளர்ப்பு பிரதேசத்தில் யாக் எனப்படும் திபெத்திய எருது முக்கிய கால்நடையாக விளங்குகின்றது. இங்குள்ள ஹொசியு குகிரை சீனாவிலும் உலகிலும் பெயர் பெற்றது. திபெத் கால்நடை வளர்ப்புப் பிரத்சத்தில் இந்த எருது முக்கியமாக வளர்கின்றது.
|