• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[வளங்கள்]

தாவர வகைகள்

உலகில் மிக அதிக தாவர மூலவளம் கொண்ட நாடுகளில் சீனா ஒன்றாகும். இஹ்கு சுமார் 30 ஆயிரம் வகை தாவரங்கள் உண்டு. மலேசியா, பிரேசில் ஆகிய நாடுகளை அடுத்து உலகில் 3வது இடம் வகிக்கின்றது. இதில் 106 பாசி இன குடும்பங்கள் இடம் பெறுகின்றன. இது உலகில் 70 விழஉக்காடு வகிக்கினஅறது. 52 குடும்பங்கள் pterldophyte இனத்தைச் சேர்ந்தவை. அது உலகில் 80 விழுக்காடாகும். அதற்கு 2600 வகை உணஅடு. அது உலகில் 26 விழஉக்காடு வகிக்கினஅறது. 8000 வகை அடர்ந்த செடிகள் உண்டு. இதில் சுமார் ஈராயிரம் வகை மரங்கள் உண்டு. உலகில் விதைவகையில் பொதிய பெறாத தாவரங்களுக்கு 12 குடும்பங்களும் 71 இனங்களும் 750 வகைகளும் இடம் பெறுகின்றன. இவற்றில் சீனாவுக்குரியவை 11 குடும்பங்கள். 34 இனங்கள், 240 வகைகள். குவிந்த காய் காய்க்கும் மரவகை மொத்த எண்ணிக்கை உலகில் 37.8 விழுக்காடு வகிக்கின்றது. உறையிலுள் காயுடைய செடிகளின் மொத்தக் குடும்பங்கள் உலகில் 54 விழுக்காடும் இனங்கள் 24 விழுக்காடும் வகிக்கின்றன.

நில உலகின் வட அரைக் கோளத்தின் குளிர் மித மற்றும் வெப்ப வளையங்களில் இருக்கின்ற முக்கியமான தாவரங்களை சீனாவில் பெரும்பாலும் காணலாம்.

Metasequoia, சீன சைப்ரஸ், yinshan எனும் மரம், சீன fir மரம், காசு தேவதாரு மரம், தைவான் fir மரம், புச்சியன் சைப்ரஸ் மரம், முதலிய மரங்கள் சீனாவுக்கே உரியவை. Shuishan எனும் சீன fir மரமான உயரமான மர வகையாகும். உலகில் பழமை வாய்ந்த மதிப்புக் குரிய அரிச தாவர வகை என அது சேர்க்கப்படுகின்றது.

யாங்சி ஆற்றுப் பள்ளத்தாக்கின் மலைப் பிரதேசத்தில் வளரும் காசு தேவதாருமரமானது, உலதில் தோட்டத்துக்குரிய ஐந்து மதிப்பிடற்கரிய மரவகைகளில் ஒன்றாகும். சீனாவில் உட்கொள்ளக் கூடிய தாவரங்களின் வகைகள் ஈராயிரத்துக்கும் மேல் அதிகமாகும். மருந்தாகப் பயன்படும் தாவரங்கின் வகைகள் மூவாயிரத்துக்கும் கூடுதலாகும். சான் பைய் சான் மலையில் விளையும் ஜின்சன், திபெத் குங்குமப் பூ, நின்சியாவின் சீனத் திருமண விதை, யூனானானின் மற்றும் குய்சோவின் போலி ஜின்சன் முதலியவை மதிப்பிடற்கரிய முலிகைகளாகும். மலர்ச் செடி வகைகளும் எண்ணற்றவை. மலரின் ராணி எனும் புகழைப் பெற்ற பியோனி மலர் சீனாவுக்கே உரியது. பெரிய பூக்கள் பல பூவிதழ்கள் எழில் மிக்க நிறம் ஆகியவற்றினால் சீனாவின் தேசிய மலர்களில் ஒன்றாக அது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

1 2 3 4 5
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040