• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[வளங்கள்]

விலங்கு வகைகளும் பரவலும்

உலகில் மிக அதிக வன விலங்கு வகைகளைக் கொண்ட நாடுகளில் சீனாவும் ஒன்றாகும். இந்நாட்டில் சுமார் 6266 வகை முதுகெலும்பு கொண்ட விலங்குகள் உண்டு. இவற்றில் 500 வகை மிருக வகையைச் சேர்ந்தவை. 1258 வகைகள் பறவை வகைகளைச் சேர்ந்தவை. 376 வகைகள் ஊர்ந்து செல்லும் விலங்கு வகைகளைச் சேர்ந்தவை. 284 வகைகள் நீரிலும் நிலத்திலும் வாழும் விலங்குகள். 3862 வகைகள் மீன்கள். உலகில் முதுகெலும்பு கொண்ட விலங்கு வகைகளில் 10ல் ஒன்றாகும். முதுகெலும்பு இல்லாத விலங்குகள் 50 ஆயிரம் வகைகளுக்கு அதிகமாகும். ஒரு லட்சத்து 50 ஆயிரம் வகை புழு பூச்சிக்களும் சீனாவில் உண்டு.

சீனாவின் பெரும் பகுதி பிரதேசஹ்கள் 3வது 4வது நூற்றாண்டுகளின் பெரிய நிலப் பகுதி பனிக்கட்டியாறுகளால் பாதிக்கப்படாத காரணத்தால் பெருவாரியான சிறப்பு விலங்கு வகைகள் இங்கு உண்டு. புள்ளிவிபரங்களின் படி 476 வகை நிலம் வாழ் முதுகெலும் விலங்குகள் சீனாவுக்கே உரியவை. இவை சீனாவின் நிலம் வாழ் முதுகெலும்பு விலங்கு வகைகளில் 19.42 விழுக்காடாகும். ராட்சத பாண்டா, பொன் ரோமக் குரங்கு, தென் சீனப் புலி, செந்நிறக் கொண்டையுடைய நாரை, குறுப்பு மற்றும் வெள்ளை டால்பிஃன், யாங்சி முதலை உள்ளிட்ட 100 வகை அரிய வன விலங்குகள் உலகில் பெயர் பெற்ரவை. கறுப்பு வெள்ளை நிறமுடைய ரோமம் கொண்ட ராட்சத பண்டாவின் எடை 135 கிலோகிராமாகும். அது இளம் மூங்கிலையும் மூங்கில் முளையையும் தின்று வாழ்கின்றது. தற்போது ஏறக்குறைய ஆயிரம் பாட்சத பண்டாக்கள் சீனாவில் வாழ்கின்றன. உலக வன விலங்குப் பாதுகாப்புச் சின்னமாக அது விளங்குகின்றது. செந்நிறக் கொண்டையுடைய நாரையானது 1.2 மீட்டர் நீளமுடைய உடலைக் கொண்டிருக்கின்றது. கிழக்காசியாவில் நீண்ட நெடிய வாழ்வின் சின்னமாக அது கருதப்படுகின்றது. வெள்ளை டால்பினானது உலகில் இரண்டு நன்னீர் திநிங்கல வகைகளில் ஒன்றாகும். 1980ல் முதன்முறையாக யாங்கி ஆற்றில் பிடிக்கப்பட்ட முதலாவது ஆண் வெள்ளை டால்பின் உலக டால்பின் ஆய்வுத் துறையில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது.

சீனாவின் வடகிழக்கு, வடக்கு, உள்மங்கோலி-சிஹ்சியாங், சிங்காய்-திபெத், தென்மேற்கு, நடுப் பகுதி, தெந் பகுதி ஆகிய 7 பிரதேசஹ்களில் விலங்குகள் பரந்து கிடக்கின்றன. வெவ்வேறான புவிவியல் நிலைக் கேற்ப வெவ்வேறான வகை விலங்குகள் வாழ்கின்றன.


1 2 3 4 5
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040