• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[வளங்கள்]

தாதுப் பொருட்கள்

சீனாவில் வளமிக்க தாதுப் பொருட்கள் உண்டு. ஏற்கனவே கண்டறியப்பட்ட தாதுப் பொருட்கள் உலகின் மொத்த எண்ணிக்கையில் 12 விழுக்காடு வகித்து உலகில் 3வது இடம் பெறுகின்றது. ஆனால் நபர்வாரி கொள்வனவு உலக நபர்வாரி கொள்வனவில் 58 விழுக்காடு மட்டுமே. இது உலகில் 53வது இடம் வகிக்கின்றது. இது வரை மொத்தம் 171 வகை தாதுப் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் தாதுப் பொருள் படிவின் அளவு கண்டு பிடிக்கப்பட்ட தாதுப் பொருட்களின் வகை 158. ( இதில் எரி ஆற்றலுக்குரிய தாதுப் பொருட்கள் 10. இருப்பு உலோகத் தாதுப் பொருட்கள் 5, உலோகத் தாதுப் பொருட்கள் 41, மதிப்பிடற்கரிய உலோகத் தாதுப் பொருட்கள் 8, உலோகமற்ற தாதுப் பொருட்கள் 91, நீர் மற்றும் வாயு சுரங்கங்கள் 3.)உலகில் தாதுப் பொருட்களின் மொத்த எண்ணஇக்கை அதிகமாகவும் தாதுப் பொருட்களின் வகைகள் முழுமையாகவும் கோவை அளவு உயர்வாகவும் உள்ள சிறுபான்மை நாடுகளில் சீனா ஒன்றாகும். ஏற்கனவே கண்டு பிடிக்கப்பட்ட தாதுப் பொருட்களின் படிவுகளின் படி சீனாவின் 45 வகை முக்கியமான தாதுப் பொருட்களில் 25 வகை உலகில் முதல் முன்று இடம் வகிக்கின்றன. இவற்றில் அரிதான மண் உலோகம் களக்கல், லான்தானியம், ரைற்ரேனியம், தான்னானியம், டங்ஸ்டன், கிராபைட், கனத்த படிக்கல், மக்னசைட், ஆண்டிமணி உள்ளிட்ட 12 உலோகங்கள் உலகில் முதல் இடம் வகிக்கின்றன.

சீனாவில் தாதுப் பொருட்களின் பரவல் வருமாறு: எண்ணெய் இயற்கை வாயு முக்கியமாக வட கிழக்குச் சீனாவிலும் வட சீனாவிலும் வட மேற்கு சீனாவிலும் பரவிக் கிடக்கின்றன. ழட சீனாவிலும் வட மேற்கு சீனாவிலும் நிலக்கரி பரந்து நிறைந்திருக்கின்றது. சீனாவின் வட கிழக்கு, வடக்கு மர்றும் தென் மேற்குப் பகுதிகளில் இரும்பு உண்டு. சீனாவின் தென்மேற்கு வட மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் செம்பு பரந்து காணப்படுகின்றது. டங்ஸ்டன், ஈயம், அன்திமணி முதலிய அரிசதான மண் உலோகங்கள் முக்கியமாக தென் சீனாவிலும் வட சீனாவிலும் பரவிக் கிடக்கின்றன. தஹ்க மற்றும் வெள்ளிச் சுரங்கங்கள் நாடு முழுவதிலும் பரவிக்கின்றன. தைவான் மாநிலத்திலும் உண்டு. தென் சீனாவில் பாஸ்பரஸ் பரவிக்கிடக்கின்றது.

முக்கிய தாதுப் பொருட்கள் வருமாறு:

நிலக்கரி:சீனாவின் நிலக்கரிப் படிவு உலகில் முதலிடம் வகிக்கின்றது. நாடு முழுவதும் கண்டறியப்பட்ட நிலக்கரிப் படிவு ஒரு லட்சம் கோடி டன்னாகும். அது முக்கியமாக வடக்கு மற்றும் வட மேற்கு சீனாவில் பரந்து கிடக்கின்றது. சான்சி, ஷான்சி, உள் மங்கோலியா முதலிய இடங்களில் அதன் படிவு வளமிக்கது.

எண்ணெய் மற்றும் வாயு வளம்: அது முக்கியமாக வட மேற்கு சீனாவில் நிறைந்து காணப்படுகின்றது. அடுத்த வட கிழக்கு வடக்கு சீனாவிலும் தென் கிழக்கு கடலோரத்தில் உள்ள ஆழமற்ற கடலின் பெரும் கண்டக் கடல் திட்டுகளிலும் பரவிக்கிடக்கின்றது. 1998ம் ாண்டுவரை சீனாவில் 509 எண்ணெய் வயல்களும் 163 வாயு வயல்களும் கண்டறியப்பட்டன. எண்ணெய் படிவு 1985 கோடி டன்னும் இயற்கை வாயு நிலவியல் அளவீடு 19.5 லட்சம் கோடி கன மீட்டருமாகும் என்று கண்டறியப்பட்டன. இவை முறையே உலகில் 9வது இடமூம் 20வது இடமும் வகிக்கின்றன. அவற்றில் அதே போன்ற மூலவளங்கில் நில எண்ணெய் படிவு 73.8 விழுக்காடும் இயற்கை வாயு அளவு 78.,4 விழஉக்காடும் வகிக்கின்றன. சொன்குவா சியாங் லௌனின், பொகாய் விரிகுடா, தரிம், செங்கல் துருப்பான், செச்சுவான், ஷான்சி-கான்சூ-நின்சியா ஆகிய 6 பெரிய எண்ணெய் மற்றும் வாயு பிரதேசங்கள் உருவாகியுள்ளன.

உலோகத் தாதுப் பொருட்கள்:

இரும்புங்கள்: உலோக இரும்பு மாங்கனீசு உள்ளிட்ட இரும்பு உலோகங்களின் படிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் இரும்பு படிவு சுமார் ஐயாயிரம் கோடி டன்னாகும். லௌ னின் , ஹொபெய், சான்சி, சிச்சுவான் முதலிய மாநிலங்களில் அது உள்ளது.

உலோகங்கள்: உலகில் ஏற்கனவே கண்டறியப்பட்ட உலோகத் தாதுக்கள் அனைத்தும் சீனாவில் பரந்து கிடக்கின்றன. இவற்றில் அரிதான மண் உலோகங்களின் படிவு உலகில் சுமார் 80 விழுக்காடு வகிக்கின்றது. ஆண்டி மணஇயின் படிவு உலகில் 40 விழுக்காடு வகிக்கின்றது. டங்ஸ்டன் படிவு உலகின் இதர நாடுகளின் மொத்தப் படிவு போல் 4 மடங்காகும்.

1 2 3 4 5
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040