• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[வளங்கள்]

காற்று வளம் நீராற்றல் சூரிய ஆற்றல் வளம்

சீனப் பிரதேங்களில் பல ஆறுகள் குறுக்கும் நெடுக்குமாக ஓடுகின்றன. அவை பெரும் எழுச்சியும் வீழ்ச்சியும் கொண்டிருப்பதால் வளமிக்க நீர் ஆற்றல் வளம் உருவாயிற்று. புள்ளி விபரங்களின் படி சீனாவின் ஆற்று நீராற்றல் வளம் 68 கோடி கிலோவாட்டாகும். ஆண்டுதோளும் இவை 592000 கோடி கிலோவாட் மணி மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். மின்சார உற்பத்தி சாதனங்களின் மொத்த ஆற்றல் 37.8 கிலோவாட் மணி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. சீனாவின் நீராற்றல் படிவும் பயன்படுத்தப்படக் கூடிய நீராற்றல் வளமும் உலகில் முதலிடம் வகிக்கின்றன.

சீனாவில் 10 மீட்டர் உயரத்திலுள்ள காற்று வளத்தின் மொத்தம் படிவு 322.6 கோடி கிலோவாட்டாகும். நிலத்தில் பயன்படுத்தப்படக் கூடிய காற்று வளத்தின் படிவு 25.3 கோடி கிலோவாட் என மதிப்பிடப்படுகின்றது.15 மாட்டர் ஆழத்துக்கு அதிகமான அண்மைக் கடலிலுள்ள காற்று வளம் நிலத்தில் இருப்பதை விட 2 மடங்கு அதிகமாகும். அதாவது 75 கோடி கிலோவாட்டாகும். சீனாவின் வடமேற்கு வடக்கு மர்றும் கிழக்கு பகுதிகளிலுள்ள புல்வெளிகள் அல்லது கோபி எனப்படும் பாலைவனங்கள் கிழக்குப் பகுதி தென்மேற்கு கடலோரம் மற்றும் தீவுகள் சீனாவில் காற்று வளமிக்க பிரதேசங்களாகும். மேலே குறிப்பிட்ட பிரதேசங்களில் வழக்கமான எரி ஆற்றல் உற்பத்தி கிடையாது. கால நிலையைப் பொறுத்து குளிர்காலத்திலும் வசந்த காலத்திலும் பருவ காற்று அதிகம் வீசுகின்றது. மறை குறைவு, கோடைகாலத்தில் காற்று குறைவு மழை அதிகம். நீர் மின்னாற்றலுடன் ஒன்று மற்றதன் தேவையை நிறைவேற்ற முடியும். இங்கு காற்று விசையால் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். 1998ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் சுமார் 20 காற்று மின்னாற்றல் நிலையங்கள் உண்டு. காற்று விசையால் இயக்கப்படும் மின்னாக்கிகளின் மொத்த ஆற்றல் 22316 ஆயிரம் கிலோவாட்டாகும். இப்போது சிங்சியாங்கின் தாப்பான் நகர் காற்று மின்னாற்றல் நிலையத்தில் 111 காற்று மின்னாக்கிகள் உள்ளன. 300, 500, 600 கிலோவாட் உற்பத்தி செய்யக் கூடிய மின்னாக்கிகளை அவை கொண்டிருக்கின்றன. அவற்றின் மொத்த மின்னாற்றல் 57.5 ஆயிரம் கிலோவாட்டாகும். இக்காற்று மின்னாற்றல் நிலையம் ஆசியாவில் மிகப் பெரிய காற்று மின்னாற்றல் நிலையமாகும். தற்போது சீனாவில் காற்று விசையால் இயக்கப்படும் மின்னாக்கிகளின் மொத்த ஆற்றல் பயன்படுத்தப்படக் கூடியவற்றில் 0.14 விழுக்காடு மட்டுமே. ஆகவே ஆகவே இதன் வளர்ச்சிக்கு ஒளிமயமான எதிர்காலம் உண்டு.

சீனாவில் பெழுமையான சூரிய வெப்ப ஆற்றல் வளம் உண்டு. ஆண்டுதோறும் பெரு நிலம் ஏற்றுக் கொள்ளக் கூடிய சூரிய வெப்ப ஆற்றலின் கதிரியக்கத்தின் ஆற்றல் 24 லட்சம் கோடி டன் தரமான நிலக்கரிக்குச் சமமானது. 3ல் இரண்டு பகுதி நிலப்பரப்பிலி சூரிய வெப்ப ஆற்றலின் ஆண்டு கதிரியக்கத்தின் அளவு ஒரு சதுர மீட்டருக்கு 6000 மெகா ஜூவாலை தாண்டியுள்ளது. திரபெத்தின் வடமேற்குப் பகுதியில் ஒரு சதுர மீட்டருக்கு 8400 மெகா ஜோலை அடையக் கூடும். உலகில் சூரிய வெப்ப ஆற்றல் மிக்க பிரேதங்களில் ஒன்றாகவும் அது திகழ்கின்றது. சீனாவின் செயல் திறன் மிக்க சூரிய வெப்ப மின்னாற்றல் நிலையம் உள் மங்கோலியாவின் பாலின் யூ லீக்கைச் சேர்ந்த குலிகுதாய் கிராமத்தில் 1982ம் ஆண்டு அக்டோபர் 11ம் நாள் அமைக்கப்பட்டது. அதன் செயல் திறன் 560 வாட்டாகும். 

1 2 3 4 5
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040