• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீனாவும் சர்வதேச அமைப்புகளும்]
ஆசியானும் சீனாவும்  

1961ஆம் ஆண்டு ஜூலை 31ந் நாள் தென் கிழக்காசிய அமைப்பு நிறுவப்பட்டது. 1967ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள், இந்தோனேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், மலேசியா ஆகிய 5 நாடுகள் பாங்கொக்கில் கூட்டம் நடத்தி, பாங்கொக் அறிக்கை வெளியிட்டு, இவ்வமைப்பு நிறுவப்பட்டுள்ளதாக அறிவித்தன. இதைத் தொடர்ந்து, கோலாலம்பூரில் நடைபெற்ற மலேசியா, தாய்லாந்து பிலிப்பைன்ஸ் ஆகிய 3 நாடுகளின் அமைச்சர் நிலைக் கூட்டத்தில், தென் கிழக்காசிய அமைப்புக்குப் பதிலாக, தென் கிழக்காசிய நாடுகள் அமைப்பை ஏற்படுத்துவது என முடிவு மேற்கொள்ளப்பட்டது.

குறிக்கோள்:

சமத்துவம், ஒத்துழைப்பு ஆகிய எழுச்சிக்கிணங்க, இப்பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம், பண்பாட்டு வளர்ச்சி ஆகியவற்றை விரைவுபடுத்த இணைந்து பாடுபடுபட வேண்டும்.

நிதியையும் நாடுகளுக்கிடையிலான உறவைக் கையாளும் கோட்பாடு, ஐ.நா.சாசனம் ஆகியவற்றையும் பின்பற்றி, இப்பிரதேசத்தின் சமாதானத்தையும் அமைதியையும் முன்னேற்றுவிக்க வேண்டும்.

பொருளாதாரம், சமூகம், பண்பாடு, தொழில் நுட்பம், அறிவியல் ஆகிய பிரச்சினைகளில் ஒத்துழைப்பையும் பரஸ்பர ஆதரவையும் உதவியையும் விரைவுபடுத்த வேண்டும்.

கல்வி, தொழில், தொழில் நுட்பம், நிர்வாகப் பயிற்சி, ஆராய்ச்சி சாதனம் ஆகியவற்றில் பரஸ்பரம் ஆதரவும் உதவியும் அளிக்க வேண்டும்.

வேளாண்மை, தொழிற்துறை ஆகியவற்றைப் போதிய அளவில் பயன்படுத்துவது, வர்த்தகத்தை விரிவாக்குவது, போக்குவரத்தை மேம்படுத்துவது, மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது ஆகியவற்றில் மேலும் பயனுள்ள ஒத்துழைப்பு மேற்கொள்ள வேண்டும்.

தென் கிழக்காசிய பிரச்சினை பற்றிய ஆராய்ச்சியை முன்னேற்றுவிக்க வேண்டும்.

ஒத்த குறிக்கோளைக் கொண்ட சர்வதேச மற்றும் பிரதேச அமைப்புகளுடன் பரஸ்பர நலன் தரும் நெருங்கிய ஒத்துழைப்பை நிலைநிறுத்தி, மேலும் நெருக்கமான ஒத்துழைப்பு வழிமுறையை ஆராய வேண்டும்.

உறுப்பு நாடுகள்:

தென் கிழக்காசிய நாடுகள் அமைப்பில் புருனை, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியன்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய 10 நாடுகள் உள்ளன.

சீனாவுடனான உறவு:

சீனாவுக்கும் இவ்வமைப்பைச் சேர்ந்த அனைத்து உறுப்பு நாடுகளுக்குமிடையில் தூதாண்மை உறவு நிறுவப்பட்டுள்ளது. 1996ல் பன்முகப் பேச்சுவார்த்தை இவ்வமைப்பின் மூலம் கூட்டாளி நாடாக சீனா மாறியுள்ளது.

1 2 3 4 5
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040