• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீனாவும் சர்வதேச அமைப்புகளும்]

ஐ.நாவும் சீனாவும்  

1945ஆம் ஆண்டு ஏப்ரல் 25ந் நாள், 50 நாடுகளின் பிரதிநிதிகள் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் ஐ.நா. சர்வதேச அமைப்பு கூட்டத்தை நடத்தின. ஜுன் 25ந் நாள், ஐ.நா. சாசனம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 26ந் நாள், இச்சாசனத்தில் கையொப்பமிட்ட சீனா, பிரான்சு, சோவியத் யூனியன், பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் அனுமதிப் பத்திரத்தை ஒப்படைத்த பின், சாசனம் தானாகவே நடைமுறைக்கு வந்து, ஐ.நா. அதிகாரபூர்வமாக நிறுவப்பட்டது. அக்டோபர் 24ந் நாள், ஐ.நா. நாளென 1947ஆம் ஆண்டு ஐ.நா.பொது பேரவை முடிவு மேற்கொண்டது.

சர்வதேச சமாதானத்தையும் பாதுகாப்பையும் பேணிக்காப்பது, பல்வேறு நாட்டு மக்களின் சமத்துவ உரிமையையும் சுய நிர்ணய கோட்பாட்டையும் மதிப்பதை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச நட்புறவை வளர்ச்சியுறச் செய்வது, உலகில் நிலவும் பொருளாதார, சமூக, பண்பாட்டு மற்றும் மனித நேய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், சர்வதேச ஒத்துழைப்பு மேற்கொண்டு, முழு மனிதக் குலத்தின் மனித உரிமை மற்றும் அடிப்படை சுதந்திரம் மீதான மதிப்பை முன்னேற்றுவிப்பது என்பன ஐ.நாவின் குறிக்கோள்களாகும். 2002ஆம் ஆண்டு செப்டெம்பர் வரை, ஐ.நாவின் உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 191ஐ எட்டியுள்ளது. இவற்றில் ஐ.நாவை நிறுவிய நாடுகளின் எண்ணிக்கை 49 ஆகும். ஐ.நாவின் தலைமை அலுவலகம் அமெரிக்காவின் நியூயார்க்கில் அமைந்துள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜெனிவா, ஆஸ்திரியாவின் வியன்னா, கீன்யாவின் நைரோபி, தாய்லாந்தின் பாங்கொக் ஆகியவற்றில் அதன் கிளை அலுவலகங்கள் அமைந்துள்ளன.

சீனா, வளரும் பெரிய நாடு. ஐ.நா. பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பு நாடும் ஆகும். சர்வதேச விவகாரங்களில் சீனா எப்பொழுதும் கோட்பாட்டில் உறுதியாக நின்று, நிதியை அளித்துவருகின்றது. ஐ.நா மற்றும் சர்வதேச அரங்கில் முக்கிய தனிச்சிறப்பு வாய்ந்த தகுநிலையை அது கொண்டுள்ளது. தற்போது, நீதியான நியாயமான புதிய சர்வதேச அரசியல் பொருளாதார முறைமையின் உருவாக்கத்தை முன்னேற்றுவிப்பதில் ஐ.நா. எத்தகைய பங்கு ஆற்றுவது என்பதை சர்வதேச சமூகம் உன்னிப்பாகக் கவனிக்கிறது. இப்புதிய ஒழுங்கை நிறுவுவது, சமாதானத்தைப் பேணிக்காப்பது, வளர்ச்சியை விரைவுபடுத்துவது, மேலாதிக்கத்தை எதிர்ப்பது ஆகியவை பற்றிய சீனாவின் கருத்தும், 5 நிரந்தர உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பை வலியுறுத்துவதும் உலக சமாதானத்துக்கும் வளர்ச்சிக்கும் துணை புரியும்.

1 2 3 4 5
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040