உலக வர்த்தக அமைப்பும் சீனாவும்
1994ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் மொரோக்கோவின் மலாகாஷ் நகரில் நடைபெற்ற சுங்க வரி வர்த்தகப் பொது இணக்க உடன்படிக்கைக்கான அமைச்சர் நிலைக் கூட்டத்தில், உலக வர்த்தக அமைப்பை நிறுவுவதென அதிகாரப்பூர்வமாக முடிவு மேற்கொள்ளப்பட்டது. 1995ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாளன்று இவ்வமைப்பு நிறுவப்பட்டது. வாழ்க்கை நிலையை மேம்படுத்தி, போதிய அளவில் வேலை உருவாக்குவதையும், யதார்த்த வருமான மற்றும் பயனுள்ள தேவையின் அதிகரிப்பையும் உத்தரவாதம் செய்வது, தொடர வல்ல வளர்ச்சிக் குறிக்கோளை நனவாக்கி, உலக மூல வளத்தை நியாயமான முறையில் பயன்படுத்தி, சரக்குகளின் உற்பத்தியையும் சேவையையும் விரிவாக்குவது, ஒன்றுக்கு மற்றது முன்னுரிமையும் நலனும் தருவதென்ற உடன்படிக்கையை உருவாக்குவது, சுங்க வரியையும் இதர வர்த்தகத் தடையையும் பெரும் அளவில் குறைப்பது அல்லது நீக்குவது, சர்வதேச வர்த்தகத்தில் நிலவும் பாகுபடுத்தும் போக்கை நீக்குவது என்பன அதன் குறிக்கோளாகும். இவ்வமைப்பின் உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 144 ஆகும். அதன் தலைமையகம், ஜெனிவாவில் அமைந்துள்ளது.
சுங்க வரி வர்த்தக பொது இணக்க உடன்படிக்கையில் கையொப்பமிட்ட நாடுகளின் தகுநிலையை மீட்பது பற்றி 1986ல் சீனா முன்வைத்த பின், உலக வர்த்தக அமைப்பில் சேர சீனா விடா முயற்சி மேற்கொண்டது. 2001ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டெம்பர் வரை, இவ்வமைப்பைச் சேர்ந்த சீனப் பணிக் குழு 4 முறை கூட்டம் நடத்தி, இவ்வமைப்பில் சீனா சேர்வதற்கான பல தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவேற்றியது. இதில் சீனா சேர்வது தொடர்பான சட்ட ஆவணம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதே ஆண்டின் நவம்பர் 9ந் நாள் முதல் 14ந் நாள் வரை, உலக வர்த்தக அமைப்பின் 4வது அமைச்சர் நிலைக் கூட்டம் கதாரின் தலைநகரான தோஹாவில் நடைபெற்றது. சீனாவின் வெளிநாட்டு வர்த்தக மற்றும் பொருளாதாரத் துறை அமைச்சர் ஷ்குவாங்சன் தலைமையிலான பிரதிநிதிக் குழு இதில் கலந்துகொண்டது. 11ந் நாள், இவ்வமைப்பில் சேர்வதற்கான உடன்படிக்கை முதற் குறிப்பில் சீனா கையொப்பமிட்டுள்ளது. டிசெம்பர் 19,20 நாட்களில், இவ்வமைப்பின் அதிகாரப்பூர்வமான உறுப்பு நாடு என்ற முறையில், இவ்வமைப்பின் தலைமை கவுன்சில் கூட்டத்தில் சீனா கலந்துகொண்டது.
1 2 3 4 5