• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீனாவும் சர்வதேச அமைப்புகளும்]

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பும் சீனாவும்  

1989ஆம் ஆண்டு ஜனவரி திங்கள், ஆஸ்திரேலிய தலைமையமைச்சர் ஹொக், தென் கொரிய பயணம் மேற்கொண்ட போது, சியோல் நகர முன்மொழிவைத் தெரிவித்தார். பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது பற்றி விவாதம் செய்யும் வகையில், ஆசிய-பசிபிக் பிரதேச அமைச்சர் நிலைக் கூட்டத்தை நடத்துமாறு அவர் முன்மொழிந்தார்.

தொடர்புடைய நாடுகளுடன் கலந்தாலோசித்த பின், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, நியூசிலாந்து, கனடா ஆகியவையும் அப்போதைய தென் கிழக்கிழக்காசிய நாடுகள் அமைப்பின் 6 நாடுகளும் ஆஸ்திரேலியாவின் தலைநகரான கான்பர்ராவில் இவ்வமைப்பின் முதலாவது அமைச்சர் நிலைக் கூட்டம் நடத்தின. APEC அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டுள்ளது.

1991ஆம் ஆண்டு நவம்பர் திங்களில் சியோல் நகரில் நடைபெற்ற APECஇன் 3வது அமைச்சர் நிலைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட சியோல் அறிக்கையில், இவ்வமைப்பின் குறிக்கோள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவை, இப்பிரதேச மக்களின் பொது நலனுக்காக, பொருளாதார அதிகரிப்பையும் வளர்ச்சியையும் நிலைநிறுத்துவது, பொருளாதாரத் துறையில் உறுப்பு நாடுகள் ஒன்றை ஒன்று சார்ந்திருப்பதை முன்னேற்றுவிப்பது, திறந்துவிடப்பட்ட பல தரப்பு வர்த்தக அமைப்பு முறையை வலுப்படுத்துவது, பிரதேச வர்த்தகத்தையும் முதலீட்டுத் தடையையும் குறைப்பது என்பனவாகும்.

இவ்வமைப்பின் உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 21 ஆகும்.

சீனாவுடனான உறவு

1991ஆம் ஆண்டு APECஇல் சீனா சேர்ந்த பின், இவ்வமைப்பின் பல்வேறு நடவடிக்கைகளில் ஆக்கப்பூர்வமாக ஈடுபட்டுவருகின்றது. இது, சீனாவின் சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கைக்குச் சிறந்த புறச் சூழலை உருவாக்கியுள்ளது. சீனாவுக்கும் இவ்வமைப்பின் உறுப்பு நாடுகளுக்குமிடையிலான இரு தரப்புறவின் வளர்ச்சியையும் பெரிதும் விரைவுபடுத்தியுள்ளது. 1993ஆம் ஆண்டு முதல், சீன அரசு தலைவர், ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் APEC தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்ற கூட்டத்தில் கலந்துகொண்டதோடு, சீனாவின் கருத்தையும் கோட்பாட்டு ரீதியான நிலைப்பாட்டையும் முன்வைத்தார். கூட்டம் வெற்றி பெறுவதில் இது ஆக்கப்பூர்வமான பங்காற்றியுள்ளது. 2001ல், APEC தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்ற கூட்டத்தை சாங்காய் மாநகரில் சீனா வெற்றிகரமாக நடத்தியது.

1 2 3 4 5
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040