• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீனாவும் சர்வதேச அமைப்புகளும்]

சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பும் சீனாவும்  

2001ஆம் ஆண்டு ஜுன் திங்களில் சீனா, ரஷியா, கஜக்ஸ்தான், கிர்கிஸ்தான், தாஜிக்ஸ்தான், உஸ்பெக்ஸ்தான் ஆகிய 6 நாடுகளின் அரசு தலைவர்கள் சாங்ஹாயில் பேச்சுவார்த்தை நடத்தி, சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உருவாக்க அறிக்கையில் கையொப்பமிட்டனர். சாங்காய் 5 நாடுகள் அமைப்பின் அடிப்படையில் புதிய மண்டலப் பல தரப்பு ஒத்துழைப்புக்காக சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை நிறுவியுள்ளதாக அவர்கள் அறிவித்தனர். பல்வேறு உறுப்பு நாடுகளுக்கிடையிலான பரஸ்பர நம்பிக்கையையும் சுமுகமான அண்டை நாட்டுறவையும் வலுப்படுத்துவது, அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், அறிவியல்- தொழில் நுட்பம், பண்பாடு, கல்வி, எரியாற்றல், போக்குவரத்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் உறுப்பு நாடுகள் பயனுள்ள முறையில் ஒத்துழைப்பதற்கு ஊக்கமளிப்பது, உலக மற்றும் பிரதேசத்தின் சமாதானம், பாதுகாப்பு, அமைதி ஆகியவற்றைப் பேணிக்காத்து உத்தரவாதம் செய்யக் கூட்டாகப் பாடுபடுவது, ஜனநாயகம், நியாயம், நீதி ஆகியவை அடங்கிய புதிய சர்வதேச அரசியல் பொருளாதார ஒழுங்கை நிறுவுவது என்பன அதன் குறிக்கோளாகும். பெய்சிங்கில் அமைப்புச் செயலகத்தை நிறுவுவதென உறுப்பு நாடுகள் முடிவு மேற்கொண்டுள்ளன.

சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை நிறுவுமாறு முன்மொழிந்த முதல் நாடுகளில் ஒன்றாகவும், இதை உற்சாகத்துடன் முன்னேற்றுவிக்கும் நாடாகவும் விளங்கும் சீனா, அமைப்புக் கட்டுக்கோப்புக்குள்ளான பல்வேறு நடவடிக்கைகளில் உற்சாகத்துடன் பங்குகொண்டு, அதன் வளர்ச்சி, விரிவாக்கம் ஆகியவற்றுக்காக, பல ஆக்கப்பூர்வமான கருத்துக்களையும் கோட்பாடுகளையும் முன்வைத்து முக்கிய பங்கு ஆற்றியுள்ளது.

1 2 3 4 5
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040