• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சிறுப்பான்மை தேசிய இன மருத்துவம்]

திபெத்திய மருந்து

திபெத்திய மருத்துவம் நீண்டகாலப் போக்கில் தனக்கென தனிப்பண்புகளை உருவாக்கிக் கொண்டது.

சன்யின் கொள்கை

திபெத்திய கோட்பாட்டின் படி மனித உடம்லில் "லாங்", "ச்சிபா", "பெய் கென்"என்று மூன்று அம்சங்கள் உள்ளன. மனித உடம்பில் உணவு, ரத்தம் சதை, கொழுப்பு, எலும்பு என்பன போன்று ஏழு வகையான பொருட்களும் மலம், விறுநீர், வியர்வை என்று மூன்று வகைக் கழிவுகளும் உள்ளன. இந்த ஏழுவகை பொருட்கள் மற்றும் மூன்று கழிவுகளில் ஏற்படும் மாற்றங்களை மூன்று அம்சங்கள் தீர்மானிக்கின்றன. இயல்பான நிலைமையில் இவை நன்றுடன் ஒன்று சமநிலையில் இணைந்து இயங்குகின்றன. ஏதாவது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அம்சங்கள் கூடும் போதோ குறையும் போதோ உடம்பின் "லாங்", "ச்சி பர்", "பெய் ஜென்"ஆகிய அம்சங்களில் நோய் உண்டாகின்றது. ஆகவே நோயாளிகள் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டுமானால் மேற்சொள்ள மூன்று அம்சங்களில் குணப்படுத்த வேண்டும்.

இவற்றில் "லாங்"என்பது இயக்க சக்தியைக் குறிக்கின்றது. இது பராம்பரிய ஹான் மருத்துவத்தில் உள்ள "பெஃங்",மற்றும் "ச்சி"என்பனவற்ரைப் போன்றது. ஆனாலும் அதை விட அகனஅற கருத்தை இது கொண்டுள்ளது. "ச்சி பா"என்றால் "டேன்"அல்லது "ஹுவோ"எனப்படுகின்றது. இது ஹான் மருத்துவத்தில் உள்ள "சூட்டுத் தன்மைக்கு" நிகரானது. உடம்பின் இயல்பான வெப்பத்தைப் பராபரித்து வயிறு சரிவர இயங்க வகை செய்வதே "ச்சி பாவின்"முக்கிய பணி, "பெய் ஜென்"என்பது எச்சிலைப் போன்றது. ஆனால் அதை விட மேம்பட்டது. இது மனித உடம்புக்கு உள்ளே உள்ள திரவக் கழிவுகளுடன் தொடர்புடையது.

திபெத்திய கோட்பாட்டின் படி மனித உடம்பில் "லாங்", "ச்சிபா" "பெய் ஜென்"ஆகியவை சமநிலையில் இல்லாதபோது நோய் உண்டாகி, உடல் நலம் கெடுகின்றது. ஆகவே இவை கூடாமலோ, குறையாமலோ சமநிலையில் இருக்கும் படி வைப்பதே சிகிச்சையின் நோக்கம்.

மனித உடற்கூறு இயல்

மனித உடற்கூறு பற்றி திபெத்தியர்களுக்கு ஆழந்த அறிவு இருக்கின்றது. திபெத்திய மருத்துவத்தில் மனித உடம்பு என்பது இதயம் ஈரல், கணையம், நுரையீரல், சிறு நீரகம், வயிறு, கல்லீரல், மூன்று குடல் துளைகள், சிறு குடல் மற்றும் பெருங்குடல் மற்றும் பெருங்குடல், சிறுநீரப்பை ஆகிய உள்ளுறுப்புக்கள் அடங்கியதாகும். பண்டைக் காலத்தில் திபெத்தியர்கள் உடல் உள்ளுறுப்புக்களின் இயக்கத்தை விளக்க பிரபுத்துவ மன்னராட்சியை ஒரு உருவகமாகப் பயன்படுத்தினர். உதாரணமாக இதயம் எனஅபது ஒரு மன்னரைப் போல மையப்பகுதியில் உள்ளது. நுரையீரல் எனஅபது ஒரு அடைச்சரைப் போல செயல்படுகின்றது. ஈரலும் கணையமும் மன்னரின் அந்தப்புர தாசிகளைப் போல இயங்குகின்றன. சிறு நீரகம் முதுகெலும்பைப் போன்றது.

பண்டைக் கால திபெத்திய மருத்துவர்களுக்கு மனித உடம்பு பற்றிய அறிவு இருந்தது என்பதை இது எடுத்துக் காட்டுகின்றது.

திபெத்திய மருத்துவத்தில் சிறப்பு சிகிச்சைகள் வாந்து உண்டாக்குதல்

இந்த சிகிச்சை முறையில் நோயாளிகளுக்கு வாந்தி வரவழைக்க சில மருந்துகள் தரப்படுகின்றன. அளவுக்கு அதிகமாக உணவு உட்பொண்டு விட்டால் அல்லது வயிற்றில் விஷம் சேர்ந்து விட்டால், வாந்தி பண்ணச் செய்யலாம். முதியவர்கள் பலவீனமாக இருப்பவர்கள், கருவுற்ற பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு இந்த சிகிச்சை தரமுடியாது. விஷத்தை உட்கொண்டு நீண்டநேரம் ஆவியிருந்தால் இந்த சிகிச்சை பயனனிக்காது.

மருந்துக் குளியல்

திபெத்திய மருத்துவத்தில் மருந்துக் குளியலுக்கு ஒரு தனித்தன்மை உண்டு. இந்த சிகிச்சை முறையில் கந்தக நீரூற்று அலுமினிய நீருற்று, சுண்ணாம்பு நீரூற்று, குகைவாழ் மஞ்சள் இன மக்களின் உலர்சாண நீரூற்று போன்ற நீரூற்றுக்களில் நோயாளிக்கு குளியல் தரப்படுகின்றது.

தண்ணீர் குளியல் அல்லது மருந்துகலந்த நீர்க்குளியல் என்று இருவகைகள் உள்ளன. தண்ணீர் குளியலில் தசையிலோ, எலும்பிலோ உம்டாகும் வெப்பத்தைக் குணப்படுத்த மேலே சொன்ன நீரூற்றுக்கள் பொருத்தமானவை. மருந்துக் குளியலில் மருந்துப் பொருட்களை அரைத்தோ, வேகவைத்தோ, கொதிக்க விட்டோ ஒருபைக்குள் போட்டு பொட்டலமாக்கி, உடம்பின் நோயுள்ள பகுதியில் ஒத்தடம் தரப்படுகின்றது.

1 2 3 4 5 6 7 8
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040