• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சிறுப்பான்மை தேசிய இன மருத்துவம்]

உய்கூர் மருந்து

பண்டைக்காலத்தில் சின்சியாங் தன்னாட்சி பிரதேசம் சீனாவின் மேற்குப் பகுதியில் இருந்தது. சிஹான் வமிசத்தில் (கி.பி.206-கி.பி 25)பட்டுப் பாதை போடப்ட்டு அது மேற்குப் பகுதி வழியாகக் கட்ந்து சென்றது. இது பொருளாதார வளர்ச்சிக்கும், பண்பாட்டுப் பிரிமாற்றத்திற்கும் உந்துதலாக இருந்தது. கீழை மருத்துவமும் மேலை மருத்துவமும் மதமதிய ஆசியாவின் பின்னிலப் பகுதியான சின் சியானில் ஒன்று சேர்ந்தன. இது உள்ளூர் இன மருத்துவ முறை உருவெடுப்பதர்கு ஊக்கமளித்தது. ஆகவே உய்குர் மருத்துவம் தனது சொந்த மருந்துகளையே சார்ந்திருந்தாலும் வெவ்வேறு வட்டாரங்கள் மற்றும் சிறுபான்மை இனத்தவர்களின் மருத்துவ முறைகளில் இருந்து காரம் பெற்று தனக்கே உரிய தனிப்பண்புகளுடன் கூடிய ஒரு மருத்துவ முறையாக மாறியது.

உய்குர் மருந்துகளைத் தயாரிக்கும் முறை

சின்சியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியில் சுமார் 600 வகை உய்குர் மருந்துகள் இருப்பதாகவும் அவற்றில் 160 வகைகள் உள்ளூர் மருந்துகள் என்ரும் இவை மொத்த உய்குர் மருந்துகளில் 27 விழுக்காடு என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

உய்குர் மருந்துகளில் வாசனை மூலிகைகளும் ஓரளவு விஷமூலிகைகளும் பயன்படுத்தப்படுகின்றன. முலாம்பழம், திமிங்கிலக் குடல் மெழுகு, அல்லி, அமோமம் கேடர்மோமம் போன்ற மூலிகைப் பொருட்கள் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன.

1 2 3 4 5 6 7 8
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040