• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சிறுப்பான்மை தேசிய இன மருத்துவம்]

சுவாங் மருந்து

சீனாவின் சிறுபான்மை இனத்தவரில் சுவாங் தேசிய இனத்தவர்தான் பெரும் பான்மையாக உள்ளனர். இவர்களின் மருந்துகள் தாங் வமிச காலத்தில் இருந்தே படிப்படியாக உருப்பெறத் தொடங்கிவிட்டன. அந்தக் காலகட்டத்தில் இப்பகுதி மக்களின் விள்டறிவு பற்றிய கருத்துக்கள் எழுதப்பட்டன. மருத்துவப் புத்தகங்களில் இது "லிங் நான் மருத்துவம்" எனப்படுகின்றது. சுவாங் மருத்துவமும், இதர தென் சீன சிறுபான்மை இன மருத்துவ முறைகளும் உருவெடுத்தற்கு இது அறிகுறியாகும். மின் மற்றும் சிங் வமிசகாலத்தில் (கி.பி.1368-கி.பி.1911)சுவாங் மருத்துவம் சிறிது முன்னேர்றம் கம்டது. இந்தக் காலகட்டத்தில் பென் காவ் காங்கு என்ற தலைப்பில் மருந்துப் பொருள் பற்றிய தொகுப்பு நூல் ஒன்று தயாரிக்கப்பட்டது. இதையும் மர்ற புத்தகங்களையும் அப்பகுதியைச் சேர்ந்த லி ஷி ச்சென் எழுதினார். மேலும் அந்தக் காலத்தில் சில மருத்துவ நிறுவனங்களும் நிபுணர்களும் தோன்றினார்கள்.

சுவாங் மருத்துவம் வளர்ச்சி அடைந்த காலத்தில் வாய் மொழியாகவே எழுத்து ஆவணம் எதுவும் இன்றி வழங்கப்பட்டது. பொது மக்களிடையே சுவாங் மருத்துவ முறைகள் பல பரவிக்கிடந்தன. இவை சீன மருத்துவத்தின் ஒரு பகுதியாகி விட்டன.

சுவாங் மருத்துவத்தின் தன்மைகள்

சுவாங் மருத்துவம் முழுமையாக வளர்ச்சி அடைந்த ஒரு முறையல்ல. இதில் ஒரு பகுதி உள்ளூர் சுவாங் மருந்துகளில் இருந்தும் இன்னொரு பகுதி பொது மக்களிடம் இருந்தும் உருவானது. சுவாங் வட்டாரம் ஏராளமாக தாவரங்களும் விலங்குகளும் நிறைந்த உள் வெப்ப மண்டலப் பகுதியில் உள்ளது. அப்பகுதி மக்கள் மலைக் கோழி, பாம்பு, எலி போன்ற காட்டு விலங்குகளை உண்டதாக கூறப்படுகின்றது. ஆகவே, காட்டுவிலங்குகள் மருந்துகளுக்கு ஒரு மூலப் பொருளாகப் பயன்படட்ன.

விஷமுறிவுக்கு சுவாங் மருந்து மிகவும் நல்லது என்று கூறப்படுகின்றது. பாம்பு விஷம், பூச்சிக்கடி விஷம், உணவு விஷம் போன்ற பலவகை விஷங்களை சுவாங் மருந்துகள் குணப்படுத்த முடியும். பாம்புக்கடி விஷத்துக்கு மிக நல்ல மாற்று மருந்து சுவாங் மருத்துவத்தில் உள்ளது. எந்த ஒரு விஷ்த்தையும் மாற்று மருந்து கொடுத்து இறக்கிவிட முடியும் என்று சுவாங் மக்கள் கருதுகின்றனர். மேலும் விஷத்தையே கூட சரியான அளவுக்குப் பயன்படுத்தி, நோய்களைக் குணப்படுத்த முடியும் என்பது அவர்களின் நம்பிக்கை.

1 2 3 4 5 6 7 8
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040