• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சிறுப்பான்மை தேசிய இன மருத்துவம்]

கொரியா மருந்து

கொரியா மருத்துவத்திற்கு அடிப்படை அதனுடைய பண்பாடாகும். இது ஹான் மருத்துவத்தின் கோட்பாடுகளை தனது நடைமுறை அனுபவத்துடன் இணைத்துள்ளது. கொரிய மக்களும் ஹான் மக்களும் பண்டைக் காலந்தொட்டே, மருத்துவம் உட்பட பல்வேறு துறைகளில் தொடர்புகளை வளர்ச்சு வந்துள்ளனர். ஹான் மக்களிடம் இருந்து பெற்ற அறிவைக் கொண்டு கொரிய மக்கள் தஹ்களுக்கென தனித்தன்மை வாய்ந்த மருத்துகளை உருவாக்கினார்கள். காலப் போக்கில் பக்குவமடைந்த இந்த மருத்துவமுறை கோட்பாட்டு அளவிலும் மருத்துவமனேகளிலும் பின்பற்றப்பட்டது. "ஸி ச்சியாங் கோட்பாடு"துவக்கத்தில் 19ம் னூற்றாண்டில் துங் யி ஷோ பாவ்யுவான் என்ற புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை லி ஜி மா என்பவர் எழுதினார்.

கொரியா மருத்துவத்திற்கு ஹான் மூலிகைகளும் கொரியாவின் உள்ளூர் மூலிகைகளும் ஆதாரமாக உள்ளன.

ஹான் மருத்துவத்தில் இருந்து ஏராளமான அறிவைப் பெற்ற கொரியர்கள் நோய்த்தடுப்புக்கும் குணப்படுத்துவதற்கும் பல ஹான் மருந்து முறைகளைப் பயன்படுத்தியுள்ளனர். ஒரு எடுத்துக் காட்டாக ஸிச்சியாங் மருத்துவப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 271 மூலிகைகளும் ஹான் இனத்தவரிடம் இருந்து கிடைத்தவை. இது போல வேறு பல புத்தகங்களும் ஹான் மருத்துவ முறைகளை கூடுதலாக வோ குறைவாகவோ பின்பற்றியுள்ளன. எடுத்துக் காட்டாக துங் யி ஷி ச்சியாவ் ஜின் குயி மி பஃங் புத்தகத்தில் 1297 ஹான் மூலிகைகள் இடம் பெற்றுள்ளன. ஹான் மருத்து வழிகாட்டியில் (அல்லது ஹான் பஃஷங் யி ச்சுவே ச்சி நான்)ஹான் இதத்தைச் சேர்ந்த 1500 க்கும் அதிகமான மருந்துக் குறிப்புக்கள் இடம் பெற்றுள்ளன. துங் யி பாவ் ஜியான் புத்தகத்தில் 15 வகைகளில் 1400க்கும் அதிகமான மூலிகைகளும் புதிய மருந்துக் குறிப்புக்கள் திரட்டில் (அல்லது செங் பு பஃங் யாவ் ஹெ பியன்)41 வகைகளின் 515 மூலிகைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

சுதேசி கொரியா மூலிகை மருத்துவத்திற்கு நீண்ட வரலாறு உண்டு. 1949ல் இருந்தே கொரியா மூலிகைகளைத் திரட்டி வகைப்படுத்துவதில் பெரிய வேலைகள் நடைபெற்ற வந்துள்ளன. கொரியா மருந்துக் குறிப்பில் மகப்பேறு தொடர்பான நோய்களைக் குணப்படுத்த கோழிக் குழம்புடன் பிளாட்டிகோடோன் வேரைக் கலந்து உண்ண வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. முடக்குவாத நோயைக் குணப்படுத்த ஆஞ்செலிகா என்னும் மென்மையான செடியின் வேர் பயனுள்ளது. இது போன்ற பல மருந்துகள் கொரியா சிகிச்சை முறையில் இடம் பெற்றுள்ளன. இது தவிர, பல மருந்துக் குறிப்புக்கள் மக்களிடையே பரவியுள்ளன. கருகருவென கூந்தல் வரை பியூஸிடனம் வேர் உதவுகின்றது. ிதைக் கொண்டு இடுப்பு வாதத்தையும் குணப்படுத்தலாம். வெளிக்காயஹ்களில் இருந்து ரத்தம் கொட்டுவதைத் தடுத்து நிறுத்தி குணப்படுத்த சுண்ணாம்புப் பொடி உதவுகின்றது.

1 2 3 4 5 6 7 8
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040