• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சிறுப்பான்மை தேசிய இன மருத்துவம்]

மங்கோலிய மருந்து

மங்கோலிய மருந்து

மங்கோலிய மருத்துவம் மங்கோரிய மக்களால் படிப்படியாக வரலாற்றில் சேர்க்கப்பட்ட ஒரு பாரம்பரிய மருத்துவ முறையாகும். ஏராளமான விஷயங்களை உளல்ளடக்கிய ஒரு வரலாற்றுச் சிறப்புடன் இது திகழ்கின்றது. நோய்களை எதிர்த்து மங்கோலிய மக்கள் நடத்திய போராட்டத்தின் சாரமாகவும் அவர்களின் அறிவுத் திரட்டாகவும் இந்த மருத்துவ முறை இருப்பதாக நம்பப்படுகின்றது. தனி இனப் பண்புகளைக் கொண்ட விஞ்ஞான மருத்துவ முறையாகவும் இது திகழ்கின்றது. நோய்களைக் குறைவான பணச்செலவுடன் சுலபமாகவும் சிரமம் இன்றியும் குணப்படுத்துவதற்காக சிறிதளவு மருந்தைப் பயன்படுத்துவதே மங்கோலிய மருத்துவ முறையின் தனிச்சிறப்பு என்று கூறப்படுகின்றது.

மங்கோலிய மருத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடு

மனித உடம்பில் உள்ள உடற்கூறு மற்றும் நோய்க் கூறுகளை விளக்க "ஹெயி", "சி லா", "ப தா கன்"என்ற வேர்களுக்கு இடையில் உள்ள உறவுகளை மங்கோலிய மருத்துவம் பயன்படுத்துகின்றது. இவற்றில் "கஹெயி"என்பது உயலின் இயக்க சக்தியாகும். விந்தனை, பேச்சு, உடம்பு மற்றும் உள் உறுப்புக்களின் இயக்கம் இதனால் இயக்கப்படுவதாக நம்பப்படுகின்றது. "ஹெ யி"இயல்புக்கு மாறாக இருக்குமானால் உள் உறுப்புக்களின் இயல்பான இயக்கம் குறைந்து மனமும் இயற்கைக்கு மாறுபட்டு தூக்கம் இன்மையும் மறதியும் உண்டாகின்றன. "சி லா"என்றால் வெப்பம் பரவுதல் என்று பொருள். உடம்பின் வெப்பத்தையும் உள்உறுப்புக்கள் மற்றும் ஆன்மாவின் வெப்பத்தையும் "சி லா"தீர்மானிப்பதாகக் கூறப்படுகின்றது. "சி லா"அளவுக்கு அதிகமானால் வாயில் கசப்பு சுவை. உண்டாகி மனதில் ஒரு வித பரபரப்பு ஏற்படும். "ப தா கன்"என்பது உடம்பில் உள்ள ஒரு விதமான பிசுபிசுப்பான பொருள் எனப்படுகின்றது. "ப தா கன்"கோளாறினால் மக்களுக்கு குளிர் அறிக்குறிகள் தோன்றி கழிவு அகலுவது தடைப்பட்டு மேலும் நிறைய சுரக்கிறது.

மங்கோலிய மருத்துவத்தின் சிறப்பு சிகிச்சைகள்

நோயுற்ற ரத்தத்தை வெளியேற்றுவதற்காக சிறிய நாளங்களை வெடெடி திறப்பு ஏற்படுத்தி ரத்தம் வடிக்கப்படுகின்றது. இந்த ரத்த வடிப்பு சிகிச்சை மூலம் ரத்தம் அல்லது "சி லா"மூலம் உண்டாகக் கூடிய வெப்பக் காரணிகளினால் ஏற்படும் நோய்கள் குணப்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் புன் ஆறாமல் பெரிதாதல் கொள்ளை நோய் (பிளேக்)அழற்சி, அடிவயிறு வீக்கம், காசநோய், கீள்வாதம் போன்ற நோய்களைக் குணப்படுத்தலாம். இத்தகைய சிகிச்சையில் இரண்டு நிலைகள் உள்ளன. ஒன்று அறுவை சிகிச்சைக்கு முன்பு ஆயத்தம் செய்வது, இன்னொன்று முறைப்படி ரத்த நாளத்தை வெட்டி ரத்தத்தை வடிப்பது.

கோப்பை வைத்து மூடுவதும் துளையிடுவதும்

இது ஒரு புறசிகிச்சை முறையாகும். இதில் கோப்பை வைத்து மூடுவதும் ரத்தம் வடிப்பதும் இணைந்துள்ளது. இந்த முறையில் நோயுற்ற உடல் பகுதி மீது ஒரு கோப்பை வைக்கப்பட்டு வீக்கம் உண்டாக்கப்படுகின்றது. பிறகு வீங்கிய பகுதியில் ஊசிகள் குத்தப்படுகின்றன. பிறகு திரும்வும் கோப்பையால் மூடப்பட்டு கெட்ட ரத்தம் உறிஞ்சப்படுகின்றது. இதனால் மனித உடம்பில் சக்தியின் இயக்கமும் ரத்த ஓட்டமும் மேம்பட்டு நோய் குணமாகிறது. தசை அதிகமாக உள்ள உடற்பகுதியில் இந்த சிகிச்சை செய்யலாம். ஆனால் எலும்புத் தாக்கான இடத்தில் செய்ய முடியாது. குறுகிய காலத்தில் வலியோ அபாயமோ இன்றி செய்யப்படும் இந்த சிகிச்சை பயன் மிக்கது என்று சொல்லப்படுகின்றது.

கொமிஸ்

கொமிஸ் என்பது ஒரு வகை பத்திய உணவு சிகிச்சையாகும். இது மார்பு அல்லது இதயப் பகுதியில் ஏற்படும் வலி அல்லது அதிர்ச்சியைக் குணப்படுத்தி மக்களை வலுவுள்ளவர்களாக ஆக்குவதாக சொல்லப்படுகின்றது. உடம்புக்கு ஆரோக்கியமானது கொமிஸ் என்பதை ஆய்வுகள் கண்டுபிடித்துள்ளன. ஏனென்றால் இதில் சர்க்கரை, புரதம், கொழுப்பு சத்து, விட்டமின்கள், அமினோ அமிலம் புளிப்பு பால் அமிலம், நொதிமம், கனிமப் பொருட்கள், நறுமணத் தாவரங்கள் மற்றும் இதர பொருட்கள் அடங்கியுள்ளன.

மங்கோலிய எலும்புச் சேர்க்கை

மங்கோலிய எலும்புச் சேர்க்கை என்பது நீண்டகால வரலாற்றில் மருத்துவ நிபுணர்கள் உருவாக்கிய சிகிச்சை முறையாகும். இதன் மூலம் எலும்பு முறிவு மூட்டுப் பிசகு அல்லது மென்திசு சேதத்துடன் தொடர்புடைய நோய்களைக் குணப்படுத்தலாம். இந்த எலும்புச் சேர்க்கை சிகிச்சை 6 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட்டுள்ளன. அவை புதுப்பித்தல், பொருத்துதல், பிடித்துவிடுதல், மூலிகைக் குனியல், பராமரிப்பு மற்றும் உடல் நலம் தேறுதல் எனப்படும். இது விஷத்தை வெளிப்படுத்தி தசை நாண்களை ஆற்றி ரத்த ஓட்டத்தை விரைவுப்படுத்துகின்றது.

1 2 3 4 5 6 7 8
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040