• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[பண்டைகால அரசியல்வாதிகள்、சிந்தனையாளர்கள்]

சட்டவியல் நிபுணர் ஹான் பெய் சு

ஹான் பெய் சு என்பவர், சீனாவின் போரிடும் காலகட்டத்தில் (கி.மு 475-கி.மு 221)புகழ் பெற்ற தத்துவ இயல் நிபுணராவார். ஃபா ச்சியா தத்துவத்தை தொகுத்து தந்தவரும், இலக்கியக் கட்டுரை எழுத்தாளரும் ஆவார். அவர் உருவாக்கிய ஃபா ச்சியா தத்துவம் சீனாவில் முதலாவது ஒன்றிணைந்த சர்வாதிகாரமுடைய நாடு நிறுவுவதற்கு தத்துவ ஆதாரத்தை வழங்கினார்.

ஹான் பெய் சு கி.மு 3ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார். போரிடும் காலகட்டத்தின் பிற்பாதியில் ஹான் அரசின் ஒரு பிரபுவாக இருந்தார். அவரால் பேச்சு மொழியில் சரளமாக பேச இயலாது, ஆனால் கட்டுரை எழுதுவதில் தேர்ச்சி பெற்றிருந்தார்.

ஹான் ஃபெய் சு வாழ்ந்த போது, ஹான் அரசு நாளுக்கு நாள் பலவீனமாகி வந்தது. நாட்டுப் பற்றுடன் அவர் பலமுறை மன்னரிடம் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று முன்மொழிந்தார். ஆட்சியாளர்கள், நாட்டை வளர்த்து படையை வலுப்படுத்துவதை தனது முக்கிய கடமையாகக் கொள்ள வேண்டும் என்று அவர் கருதினார். ஆனால், மன்னர் அவருடைய முன்மொழிவை கேட்கவில்லை. எனவே, வரலாற்றில் நாட்டை நிர்வகிப்பதில் கிடைத்த அனுபவங்களையும், நடைமுறை நிலைமையையும் கொண்டு, சுமார் ஒரு லட்சம் எழுத்துக்களுடைய அரசியல் ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். பின்னர் இந்த கட்டுரைகளை தொகுத்து ஹான் ஃபெய் சு என்ற பெயருடன் ஒரு நூலை வெளியிட்டார். அவருடைய இந்த ஆய்வுக் கட்டுரைகளை ஹான் அரசு கவனிக்கவில்லை. ஆனால் அப்போது வலுமிக்க நாடாக இருந்த ச்சின் அரசின் மன்னரான ச்சி சி ஹுவாங் இந்த நூலை மிகவும் விரும்பினார். ச்சின் சி ஹூவாங் படையை அனுப்பி ஹான் அரசைத் தாக்கிய போது, ஹான் அரசின் மன்னர் ஹான் ஃபெய் சுவை தூதராக அனுப்பி, ச்சின் அரசுடன் சமரசம் செய்தார். ச்சின் சி ஹுவாங் அவரை தம் பக்கத்தில் நிறுத்திவைத்து, அவரை முக்கிய பதவியில் நியமிக்க எண்ணினார். அப்போது, ச்சின் அரசின் தலைமை அமைச்சராக இருந்தவர் லீ ஸ் ஹான். அவர் பெய் சுவின் சக மாணவர். தன்னைவிட ஹான் பெய் சுவிற்கு திறமை அதிகம் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். ஆகவே பொறாமை காரணமாக, அவர் மன்னரிடம் ஹான் ஃபெய் சுவை பற்றி இழிவுப்படுத்திப் பேசினார். மன்னரும் அவருடைய கெட்ட வார்த்தையை கேட்டு, ஹான் ஃபெய் சுவை சிறையில் அடைத்து அவரை நச்சூட்டிக் கொலை செய்தார்.

ஹான் ஃபெய் சுவின் முக்கிய படைப்பான, "ஹான் ஃபெய் சு"என்ற நூல் ஃபா ச்சியா தத்துவத்தில் முக்கிய இடம் வகிக்கின்றது. இந்த நூலில் 55 கட்டுரைகள் உள்ளன. சுமார் ஒரு லட்சம் எழுத்துக்கள். அவற்றில் பெரும்பாலானவை ஹான் ஃபெய் சுவின் படைப்புக்களாகும். அப்போது, சீனாவின் சிந்தனைத் துறையில் கம்பியூசியஸ் தத்துவம், மோ சு தத்துவம் ஆகியவை முக்கியமானவை. இந்த தத்துவங்கள், முந்தைய மன்னர் மாதிரி ஆட்சிபுரிவது, பழைய சமூகத்தை மீட்பது என்பனவற்றை பிரச்சாரம் செய்கின்றன. ஹான் ஃபெய் சுவின் ஃபா ச்சியா தத்துவம் பழைய சமூகத்தை மீட்பதை உறுதியாக எதிர்த்தது. காலத்துக்கு ஏற்ப ஆட்சிபுரிய வேண்டும் என்று அவர் கருதினார். கருணை காட்டி ஆட்சிபுரிய வேண்டும் எனக் கூறும் கம்பியூசியஸ் தத்துவத்தை ஹான் ஃபெய் சு தாக்கி, சட்டப்படி ஆட்சிபுரிய வேண்டும் என்று கூறினார். பெரும் அளவில் பரிசுகளை வழங்குவது, கடுமையாக தண்டிப்பது, வேளாண் துறைக்கு முக்கியத்துவம் கொடுப்பது, போருக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஆகிய நான்கு கொள்கைகளை முன்வைத்தார். மன்னரின் அதிகாரம் கடவுள் வழங்கியது என்று அவர் கருதினார். ச்சின் வம்சத்துக்குப் பின் சீனாவின் எந்த நிலப்பிரப்புத்துவ சர்வாதிகார ஆட்சியின் உருவாக்கத்துக்கும் ஹான் ஃபெய் சுவின் தத்துவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஹான் ஃபெய் சுவின் கட்டுரைகள் மிகவும் கவனமாக நியாயங்களை விளக்கிக் கூறுகின்றன. வாக்கியங்கள் கூர்மையாக உள்ளன. மிகவும் தெளிவாகவும் சான்றுகளைக் கொண்டும் விஷயங்களை எடுத்துக் கூறுகின்றது. இறுதியில் முக்கிய சரியான தத்துவத்தை முன்வைக்கின்றன. எடுத்துக்காட்டாக, "வாங் செங்"என்ற கட்டுரையில் நாடு ஒழிந்துபோவதற்கு வழிகோலும் 47 தவறுகளை சுட்டிக்காட்டியுள்ளன. இது முன்கண்டிராதது. "நன் யான்","சுவோ நான்"ஆகிய இரண்டு கட்டுரைகள், அவற்றில் வர்ணிக்கப்பட்டவர்களின் மனப்பான்மையை மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து வெளிப்படுத்தியுள்ளன.

ஹான் ஃபெய் சுவின் கட்டுரைகளின் அமைப்பு மிகவும் சிறப்பானது. கட்டுரைகள் துணிவுடன் வர்ணிக்கின்றன. வார்த்தைகளில் வேடிக்கைகள் நிறைய காணப்படுகின்றன. சாதாரண வாக்கியங்கள் விசித்திரங்களை கூறி, படிப்பவர்களை ஆழமாக சிந்திக்கச் செய்கின்றன, மக்களுக்கு முன் எச்சரிக்கை விடும் பயனை தருகின்றன. ஹான் ஃபெய் சு பல எளிமையான கட்டுக் கதைகளையும் ஏராளமான வரலாற்று அறிவுகளையும் ஆதாரங்களாக கொண்டு தத்துவத்தை விளக்கிக் கூறினார். இதன் மூலம் அவர் தமமுடைய ஃபா ச்சியா தத்துவத்தையும் சமூகம் குறித்த ஆழமிக்க கருத்தையும் வெளிப்படுத்தினார். அவருடைய கட்டுரைகளில் பல கட்டுக் கதைகள் தோன்றின. அவற்றின் அதிகமான உள்ளடக்கங்கள், உணர்ச்சி வசமுள்ள கதைகள் அன்றாட வாழ்க்கையில் மக்களால் பரவலாகப் பேசப்படுகின்றன.

1 2 3 4 5
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040