• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[பண்டைகால அரசியல்வாதிகள்、சிந்தனையாளர்கள்]

கம்பியூசியஸும் கம்பியூசியஸ் தத்துவமும்

சீனாவின் பாரம்பரிய பண்பாடு பற்றி பேசும் போது, ஒருவரைப் பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. அவர் தான் கம்பியூசியஸ். 20ஆம் நூற்றாண்டின் 70 ஆம் ஆண்டுகளில் அமெரிக்க அறிஞர் ஒருவர் மனித வரலாற்றில் மாபெரும் செல்வாக்குடைய 100 புகழ்பெற்றவர்களின் பெயர்களை வரிசைப்படுத்திய போது, கம்பியூசியஸ் என்ற பெயரை ஐந்தாவது இடத்தில் வைத்தார். அவருடைய பெயர் இயேசு, சாக்கியமுனி முதலிய பெயர்களுக்கு அடுத்தப்படியாக இருக்கின்றது. ஆனால் சீன மக்களை பொறுத்தவரையில் கம்பியூசியஸின் செல்வாக்கு முதலிடம் வகிக்கின்றது. ஒவ்வொருவரிடமும் அவரின் செல்வாக்கு குறைவாகவோ கூடுதலாகவோ ஏற்பட்டுள்ளது.

கம்பியூசியஸ் சீனாவின் கம்பியூசியஸ் தத்துவத்தை உருவாக்கியவர். கடந்த ஈராயிரம் ஆண்டுகளாக, கம்பியூசியஸ் சிந்தனை சீனாவின் அரசியல், பண்பாடு முதலியவை தவிர, ஒவ்வொரு சீனரின் செயல்பாடு மற்றும் சிந்தனை முறையிலும் வெளிப்படுகின்றது. சில வெளிநாட்டு அறிஞர்கள் கம்பியூசியஸ் தத்துவத்தை சீனாவின் மத சிந்தனையாகக் கூட கருதுகின்றனர். உண்மையில் கம்பியூசியஸ் தத்துவம் சீனாவின் பழங்கால தத்துவ இயல் குழுக்களில் ஒன்றாகும். அது ஒரு தத்துவச் சிந்தனையாகும். மதச் சிந்தனை அல்ல. சீனாவின் ஈராயிரத்துக்கும் அதிகமான ஆண்டுகளில் நிலப்பிரபுத்துவ சமூகங்களில் சீராக வளர்ந்துள்ள ஒரு முறையான சிந்தனையாக கருதப்பட்டு நீண்டகாலமாக ஆதிக்கத்தில் இருந்து வருகின்றது. கம்பியூசியஸ் சிந்தனை சீனாவின் பண்பாட்டில் ஆழ்ந்த செல்வாக்கை ஏற்படுத்தியது மட்டுமல்ல, சில ஆசிய நாடுகளிலும் தாக்கத்தை உண்டாக்கியது. இன்று, சீனர்கள் கடல் கடந்து அனைத்து நாடுகளிலும் பரந்து வாழ்வதால், கம்பியூசியஸ் சிந்தனையின் செல்வாக்கு சீனாவுக்கு அப்பால் ஆசிய நாடுகளில் பரவியுள்ளது என்று கூறலாம்.

கம்பியூசியஸ் கி.மு 551ஆம் ஆண்டு பிறந்து கி.மு 479 ஆம் ஆண்டு இறந்தார். பழைய கிரேக்கத்தின் புகழ்பெற்ற அறிஞர் அரிஸ்டாட்டிலை விட 100 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தார். கம்பியூசியஸ் தமது 3 வயதில் தந்தையை இழந்தார். பின்னர் அவருடைய தாயார் அவருடன் இன்றைய சீனாவின் ஷான்துங் மாநிலத்தில் குடியிருந்தார். கம்பியூசியஸின் இயற்பெயர் கொங் ச்சியூ, கம்பியூசியஸ் என்பது மக்கள் அவரை மதிப்புடன் அழைக்கும் பெயராகும். பழைய சீனாவில், ஒருவருடைய குடும்பப் பெயருக்குப் பின் ஒரு "சு"என்ற எழுத்தை சேர்த்தால் அவரை உயர்வாக மதிப்பதாகப் பொருள்படுகின்றது.

கமிபியூசியஸ் வாழ்ந்த காலம், சீன வரலாற்றில் வசந்த மற்றும் இலையுதிர் காலமாகும். இந்த கால கட்டத்தில், முன்பு ஒன்றிணைந்த நாடு பிளவுப்பட்டு, பல சிறிய அரசுகளாக சிதறியது. கம்பியூசியஸ் "லு" என்ற ஒரு சிறிய அரசில் வாழ்ந்தார். அப்போது அந்த நாட்டின் பண்பாடு மிகவும் வளர்ச்சியடைந்தது.

கம்பியூசியஸ் தமது வாழ்நாள் முழுவதும் பெரிய அதிகாரியாக பணி புரியவில்லை. ஆனால் அவர் அறிவுக்கூர்மை மிக்கவர். பழைய சீனாவில் கல்வி பெறுவது பிரபுக்களின் தனிச்சிற்றப்பு உரிமையாக இருந்தது. ஆனால், கம்பியூசியஸ் தனது அறிவாற்றலைப் பயன்படுத்தி, பிரபுக்களின் இந்த தனிஉரிமையை முறியடித்தார். அவர் தாமே மாணவர்களைச் சேர்த்து பாடம் சொல்லிக்கொடுத்தார். எந்த வர்க்கத்ததைச் சேர்ந்தவர் என்பதைப் பார்க்காமல், கல்விக் கட்டணமாக சில பொருட்களை கட்டினால், அவரிடம் கல்வி பயிலலாம். கம்பியூசியஸ் தனது அரசியல் கருத்தையும் ஒழுக்கச் சிந்தனையையும் பிரச்சாரம் செய்தார். மொத்தம் 3000க்கும் அதிகமானோர் அவருடைய மாணவர்களாக இருந்தனர். மாணவர்களில் சிலர் கம்பியூசியஸ் போல ஒரு மாபெரும் அறிஞராக மாறினார்கள். அவர்கள் கம்பியூசியஸ் சிந்தனையை ஏற்றுக்கொண்டு வளர்த்து விரிவான முறையில் பரப்பினார்கள்.

கம்பியூசியஸின் சிந்தனை சீன நிலப்பிரபுத்துவ காலகட்டம் முழுவதிலும் ஆதிக்க நிலையில் இருந்தவந்ததற்கு காரணம் என்ன?இது தெளிவாக விளக்கிச்சொல்ல முடியாத ஒரு கேள்வியாகும். சுருக்கமாக கூறின், அவரது கண்டிப்பான ஜாதிய சிந்தனையும் அரசியல் சீர்திருத்த சிந்தனையும் ஆட்சி வர்க்கத்தின் நலனுக்குப் பொருத்தமாக இருந்தது. இந்த சிந்தனை, அப்போதைய சமூகத்தின் ஒருமைப்பாட்டுக்கும் சாதகமாக இருந்தது, சமூக வளர்ச்சியைத் தூண்டியது. கம்பியூசியஸ் கண்டிப்பான ஒழுக்க விதிகளையும் சமூக ஒழுங்கையும் வலியுறுத்தினார். கீழ் மட்டத்தைச் சேர்ந்தவர் மேல் மட்டத்தைச் சேர்ந்தவரின் விருப்பத்தை மீறினால், அல்லது மகன் தந்தையாரின் விருப்பத்தை மீறினால் அவர் கடும் குற்றம் இழைத்துவிட்டது என்பது கம்பியூசியஸின் கருத்து. அவருடைய தத்துவத்தின் படி, அரசர் நாட்டை சீரான முறையில் நிர்வகிக்க வேண்டும், சாதாரண மக்கள் அரசருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் பல தகுதிகள் இருக்கலாம். அவர் ஒரு மகன், அதேவேளையில் தந்தையாராகவும் ஒரு அதிகாரியாகவும் இருக்கலாம். ஆனால் வேறுபட்ட நிலையில் தனது தகுதிக்கான மதிப்பு வரம்பை தாண்டக் கூடாது. இவ்வாறு நாடு அமைதியாக இருக்கும், மக்களும் அமைதியாக வாழ்வார்கள்.

கம்பியூசியஸின் தத்துவம் துவக்கத்தில் முக்கிய சிந்தனையாக விளங்கவில்லை. கி.மு 2ஆம் நூற்றாண்டில் சீனா மிகவும் வலுவான, ஒன்றிணைந்த, அதிகாரம் மத்திய அரசில் குவிந்திருக்கும் ஒரு நாடாக இருந்தது. கம்பியூசியஸ் தத்துவம், நிலப்பிரபுத்துவ சமூகத்தின் நிதானத்தைப் பேணிக்காப்பதற்கு பொருத்தமானது என்பதை ஆட்சியாளர்கள் கண்டறிந்தனர். எனவே, கம்பியூசியஸ் தத்துவம் நாட்டின் முறையான சிந்தனையாக விதிக்கப்பட்டது.

"லுன் யூ" எனும் ஒரு சிறு நூலில், கம்பியூசியஸின் சிந்தனையும் செயல்பாடும் தொகுத்து எழுதப்பட்டன. நூலில், முக்கியமாக கம்பியூசியஸின் உரைகளும் அவர் மற்றும் அவருடைய மாணவர்களின் உரையாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த நூல் பழைய சீனாவில் மேற்கு நாடுகளின் விவிலயம் போன்ற ஒரு புனித நூலாக கருதப்பட்டது. சாதாரண மக்கள் இந்த நூலின் சிந்தனைப்படி, தங்களது வாழ்க்கையை முறைப்படுத்த வேண்டும். ஒருவர் அதிகாரியாக இருந்து அரசியலில் ஈடுபட விரும்பினால், அவர் இந்த நூலை நுணுக்கமாக படிக்க வேண்டும். சீன வரலாற்றில், பாதி பகுதி "லுன் யூ"யைக் கொண்டு நாட்டை ஆட்சிபுரிய முடியும் என்று கூறப்படுகின்றது.

உண்மையில், "லுன் யூ"என்ற நூலில் செயல்பாடு பற்றிய விதிகள் மட்டும் நிறைய இருக்கவில்லை. மாறாக, அதில் அதிக உள்ளடக்கங்களும் அழகான வார்த்தைகளும் காணப்படுகின்றன. அறிவுச் செறிவு வளமாக உள்ளது. இந்த நூலில் கம்பியூசியஸின் உரைகள் பல துறைகளை குறிப்பிடுகின்றன. படிப்பது, இசை, சுற்றுலா, நண்பருடன் பழகுவது முதலிய அம்சங்கள் உள்ளன. அவற்றில், சு குங் எனும் ஒரு மாணவர் நாட்டை நிர்வகிப்பது பற்றிய ஒரு கேள்வி கேட்டார். படை, உணவு, மக்கள் ஆகிய மூன்றிலிருந்து ஒன்றை நீக்க வேண்டிய நிலை ஏற்படும் போது, எதை நீக்க வேண்டும் என்று கேட்ட போது, படை என்று கம்பியூசியஸ் சிறிதும் தயங்காமல் பதிலளித்தார்.

கம்பியூசியஸின் தத்துவத்தில் பொருட்கள் மிகவும் செழிப்பானவை. பல வார்த்தைகள் இன்றும் மதிப்பிடற்கரியவை. "லுன் யூ"என்ற நூலிலுள்ள அவரது பல வார்த்தைகள், இன்று கூட சீன மக்களால் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. எடுத்துகாட்டாக, "மூவரில் ஒருவர் கண்டிப்பாக எனது ஆசிரியராக இருப்பார்"அதாவது, ஒவ்வொருவருக்கும் நிறை உண்டு, மக்கள் பரஸ்பரம் படிக்க வேண்டும்.

1 2 3 4 5
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040