• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[பண்டைகால அரசியல்வாதிகள்、சிந்தனையாளர்கள்]

மொங் சு

மொங் சு என்பவர் சீனாவின் போரிடும் காலத்தைச் சேர்ந்த (கி.மு, 5ஆம் நூற்றாண்டு முதல் கி.மு 3 நூற்றாண்டு வரை)மகத்தான சிந்தனையாளர். அப்போதைய சீனாவின் முக்கிய தத்துவமான கம்பியூசியஸ் தத்துவத்தின் முக்கிய பிரதிநிதிகளில் ஒருவராவார்.

கோ என்றும் மொங் சு அமைக்கப்பட்டார். அவர் கி.மு 4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார். ZOU (இன்றைய ஷான்துங் மாநிலத்தின் ZOU CHENG நகரம்) அரசைச் சேர்ந்தவர். மொங் சு, LU அரசின் பரிவு மொங் சுன் சியின் வழித்தோன்றல் ஆவார். மொங் சு வாழ்ந்த காலத்தில் பல தத்துவங்கள் ஒரே வேளையில் நிலவின. கம்பியூசியஸ் தத்துவதை ஏற்றுக்கொண்டு வளர்த்து ஒரு முழுமையான சித்தாந்த அமைப்புமுறையை அவர் முன்வைத்தார். இது பிற்காலத்துக்கும் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. எனவே கம்பியூசியஸுக்கு அடுத்த படியான புனித இடம் மொங்சுவுக்கு தரப்பட்டது.

கம்பியூசியதின் ஒழுக்க ஆட்சி சிந்தனையை ஏற்றுக்கொண்டு வளர்த்து அற ஆட்சி தத்துவத்தை தமது அரசியல் சிந்தனையின் மையமாக மாற்றினார். அவர், அன்பு பாசம் என்ற கோட்பாட்டை அரசியலில் பயன்படுத்தியதன் மூலம் வர்க்க முரண்பாட்டை தளர்த்தி, நிலப்பிரபுத்துவ வர்க்க ஆட்சியின் நீண்டகால நலனை பேணிக்காத்தார்.

ஒரு புறம் மொங் சு ஆளுகிறவர்கள், ஆளப்படுகிறவர்கள் என்ற வர்க்க பேதங்களை கண்டிப்பான முறையில் பின்பற்றினார். மூளை உழைப்பாளர்கள் ஆட்சி புரியவேண்டும். உடல் உழைப்பாளிகள் ஆளப்பட வேண்டும் என்று அவர் கருதினார். அத்துடன், சோ வம்சத்தில் உருவாக்கப்பட்ட முறையை முன்மாதிரியாக கொண்டு, பேரரசர் முதல் சாதாரண மக்கள் வரையான ஒரு கோவையான சாதி முறைமையை உருவாக்கினார். மறுபுறம், ஆட்சியாளர்களுக்கும் ஆளப்படுகிறவர்களுக்கும் இடையே உள்ள உறவை, பெற்றாருக்கும் குழந்தைகளுக்குமிடையிலான உறவாக வர்ணித்தார். ஆட்சியாளர்கள், தந்தை தாயார் போல மக்களின் துன்பத்தில் கவனம் செலுத்த வேண்டும், மக்கள் தமது தாய்தந்தையை அணுகுவதை போல ஆட்சியாளருடன் அன்பாக இருந்து அவர்களுக்கு சேவை புரியவேண்டும் என்று அவர் கருதினார்.

மொங் சு, போரிடும் காலத்தின் அனுபவத்தின் படி, பல்வேறு அரசுகளின் ஏற்றத்தாழ்வுகளை தொகுத்து, ஜனநாயகப் பண்புகொண்ட முதல் மதிப்பு ம்களுக்கு, அடுத்து நாடு, மூன்றாவதாக பேரரசர் என்ற சிந்தனையை முன்வைத்தார். மக்களை எவ்வாறு நடத்துவது என்பது, நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கருதினார். மக்களின் விருப்பங்களில் மொங் சு மிகவும் கவனம் செலுத்தினார். இது ஆட்சியுரிமை நிலைக்குமா? இழந்துவிடுமா? என்பதற்கு திறவுகோலாகும் என்று அவர் பல வரலாற்று உதாரணங்களை கொண்டு விளக்கிக் கூறினார்.

மொங் சு ஒழுக்க நெறியை அரசியலுடன் நெருக்கமாக ஒன்றிணைத்து, ஒழுக்கமாக இருப்பது, பயிற்சி, அரசியலைச் சரிவர நடத்துவதற்கான அடிப்படையாகும் என்று வலியுறுத்தினார்.

உலகின் அடிப்படை நாடு, நாட்டின் அடிப்படை குடும்பம், குடும்பத்தின் அடிப்படை மனிதனே என்று அவர் கூறினார்.

ஒழுக்க நெறியில் அறம், நியாயம், மரியாதை, அறிவு ஆகியவை அடங்கும். இந்த நான்கில் அறமும், நியாயமும் மிகவும் முக்கியமானவை. சமூகத்தின் உறுப்பினர்கள் அனைவரும் அறம், நியாயம் என்ற அடிப்படையில் மனிதர்களுக்கிடையிலான உறவை கையாளுவார்களானால், நிலப்பிரபுத்துவ ஒழுங்கின் உறுதிப்பாட்டுக்கும், நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் உத்தரவாதம் தர முடியும் என்று மொங் சு கருத்துத் தெரிவித்தார்.

இந்த ஒழுக்கங்களின் மூலத்தை விளக்கிக் கூறும் வகையில், மனிதர்கள் அனைவருமே ஆரம்பத்தில் நல்ல குணமுடையவர்கள்தான் என்று அவர் கூறினார். சமூகத்தின் பல்வேறு உறுப்பினர்களுக்கிடையில் வேலை மற்றும் வர்க்க வேறுப்பாடுகள் இருந்த போதிலும் அவர்களின் மனிதத் தன்மை ஒன்றாக இருக்கின்றது என்று அவர் கருதினார்.

மொங் சுவின் தத்துவம், பிற்காலச் சீனாவின் பல்வேறு சமூகங்களுக்கு இடையே அரசியல், சிந்தனை, பண்பாடு, ஒழுக்கம் பாரம்பரியம் ஆகியவற்றில் மாபெரும் செல்வாக்கை ஏற்படுத்திய போதிலும், மொங் சுவின் தத்துவத்தை அப்போதைய ஆட்சியாளர்கள் அங்கீகரிக்கவில்லை.

மொங் சு அறிஞர் என்ற முறையில் பல்வேறு சிற்றரசர்களிடம் தமது அற ஆட்சி முறையை எடுத்துக் கூறினார். அவர், லியாங் (வெய்)ச்சி, சொங், தெங், லு ஆகிய அரசுகளுக்கு சென்றிருந்தார். அப்போது, அந்த அரசுகள் நாட்டை வளர்த்து படையை வலுவாக்கி, வன் செயல் மூலம் சீனாவை ஒன்றிணைக்க முயன்றன. மொங் சுவின் அற ஆட்சி கருத்து, பயனற்றது என்று கருதப்பட்டு நடைமுறைக்கு வரும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் இந்த சிற்றரசர்களுடன் தொடர்பு கொள்ளும் போது, தமது தெளிவான சிறப்பு குணத்தை வெளிப்படுத்தினார். ஆட்சியாளர்களை அவர் இலேசாக நினைத்தார். அதிகாரிகளையும் பிரபுக்களையும் இழிவாகப் பார்த்தார். சமூகத்தில் நிலவும் குழப்பத்தை ஒழித்து, மக்களை துன்பத்துயரத்திலிருந்து காப்பாற்ற விரும்பினார். பல்வேறு அரசர்களுடன் தொடர்பு கொள்ளும் போது, எப்பொழுதும் நேர்மையாகவும் அடிபணியாமலும் இருந்து, தமது துணிவைக் காட்டினார்.

பின்னர், அவர் இந்த துறையிலிருந்து விலகி, பள்ளிகளில் கல்வி கற்றுக்கொடுத்தார். அவர் தமது மாணவர்களுடன் இணைந்து 7 கட்டுரைகள் அடங்கிய"மொங் சு"என்ற நூலை எழுதினார். இந்த நூலில் மொங் சுவின் உரைகளும் அவர் இதர தத்துவப் பிரிவுகளின் பிரதிநிதிகளுடன் நடத்திய வாதப்பிரதிவாதங்களும் இடம் பெறுகின்றன. கம்பியூசியஸுக்கு பிந்திய கம்பியூசியஸ் தத்துவஞானி என்ற முறையில், மொங் சு கம்பியூசியஸ் தத்துவத்தை ஏற்று வளர்த்தார். இந்த நூல் முழுவதிலும் மாபெரும் துணிவு, உணர்வு, தெளிவான விளக்கம், ஒன்றன் பின் ஒன்றான விமர்சனம், தீவிரமான வார்த்தைகள், வேடிக்கையான வார்த்தைகள் ஆகியவை இருக்கின்றன. திருடுவது பற்றிக் கூட நூலில் காணப்படுகின்றது. ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு பின், மொங் சுவின் உணர்ச்சி வசப்பட்டு உறுதியுடன் இருக்கும் தனிச்சிறப்பு மிக்க தன்மையை மக்கள் இன்னும் தெளிவாக உணரலாம். ஒரு மகத்தான சிந்தனையாளரின் துடிப்புமிக்க உருவத்தைத் காணலாம். எனவே, "மொங் சு"என்ற நூல் பல ஆண்டுகளாக ஈர்ப்பு ஆற்றல் இழக்காமல் மக்களின் வரவேற்பை பெற்று முதல் தரமான தத்துவ நூலாக கருதப்படுகின்றது.

1 2 3 4 5
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040