• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[பண்டைகால அரசியல்வாதிகள்、சிந்தனையாளர்கள்]

ச்சுவாங் சு

ச்சுவாங் சு என்பவர் லௌ சுவை அடுத்து, சீனாவின் போரிடும் காலகட்டத்தின் தௌ தத்துவப் பிரிவின் பிரதிநிதியாவார்.

ச்சுவாங் சுவின் பெயர் சோ. கி.மு 4ஆம் நூற்றாண்டின் சோங் அரசைச் சேர்ந்தவர். அவர் சோங் அரசில் உள்ளாட்சியின் அதிகாரியாக இருந்தார். ச்சுவாங் சு இளம் வயதிலிருந்தே மிகவும் விவேகமாகவும் அயராது படித்துக் கொண்டும் இருந்தார். அவர் தெற்கிலுள்ள பல்வேறு அரசுகளில் பயணம் மேற்கொண்டு, பழைய பண்பாட்டையும் பழக்கவழக்கங்களையும் ஆராய்ந்தார். வாழ் நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் துடிப்பாகவும் காணப்பட்டார். அவர் மரியாதை மற்றும் சட்டத்தை புறக்கணித்து, சிற்றரசனை இழிவாக பார்த்தார். ச்சு அரசின் மன்னர் அவரை தலைமை அமைச்சராக நியமிக்க எண்ணினார். அவர் மறுத்துவிட்டார். அதற்கு பின்னர் என்றுமே அதிகாரியாக இல்லாமல், ஒளிந்து வாழ்ந்து புல் காலணியை தயாரிப்பதை தனது தொழிலாக கொண்டு, தௌ தத்துவத்தை பரப்பி, ஒரு லட்சம் எழுத்துக்களுடைய கட்டுரைகளை படைத்தார்.

"ச்சுவாங் சு"என்ற நூலில் 33 கட்டுரைகள் உள்ளன. அவை உட்புற கட்டுரைகள், வெளிப்புறக் கட்டுரைகள், கலப்பு கட்டுரைகள் என பிரிக்கப்படுகின்றன. உட்புறக் கட்டுரைகள் எல்லாம் ச்சுவாங் சு தாமே எழுதியவை. வெளிப்புறக் கட்டுரைகள், கலப்பு கட்டுரைகளில் ச்சுவாங் சுவுடைய மாணவர்கள், மற்றும் பிற்கால அறிவாளர்களின் படைப்புகள் சேர்க்கப்பட்டன. உட்புறக் கட்டுரைகளில் "ச்சிவூலுன்","சியோ யௌ யூ","தா சோங் ஷி" ஆகியவை, ச்சுவாங் சு தத்துவத்தை செறிந்த முறையில் வெளிப்படுத்துகின்றன.

ச்சுவாங் சு தத்துவத் துறையில் லௌ சு மற்றும் தௌ தத்துவச் சிந்தனையை ஏற்றுக்கொண்டு, தனது தனிச்சிறப்பு வாய்ந்த தத்துவ சிந்தனை முறைமையையும் சிறப்புமிக்க சிந்தனை மற்றும் கட்டுரை நடையையும் உருவாக்கினார். "தௌ"என்பது உண்மையாக உள்ளது. "தௌ"என்பது உலகில் நிலவும் அனைத்து பொருட்களின் மூலம் ஆகும். இயற்கை இயல்பாகவே உள்ளது, அரசியல் நிர்வாகம் வேண்டாம், இயல்பாகவே ஒழுங்காக இருக்கும். மனிதகுலத்தின் வாழ்வு முறை இயற்கைக்குத் திரும்ப வேண்டும் என்று அவர் கருதினார். கருணை பற்றிப் பிரச்சாரம் செய்வது, சரி, தவறு என்பதை வித்தியாசப்படுத்துவது என்பன மனிதன்மீது திணித்த தண்டனையாகும் என்று அவர் கருத்து தெரிவித்தார். அப்போதைய ஆட்சியாளரின் கருணை, சட்ட ஆட்சி ஆகியவற்றை அவர் குறைகூறினார். சமூகத்தில் நிலவும் மரியாதை, சட்டம், அதிகாரம், செல்வாக்கு ஆகியவற்றை அவர் வன்மையாக விமரிசித்தார்.

மனிதகுலத்தின் வாழ்க்கை முறையில், அவர் இயற்கையை மதிக்கின்றார். "இயற்கையும் நானும் ஒரே வேளையில் வாழ்கின்றோம். அனைத்துப் பொருட்களும் என்னுடன் ஒன்றுசேர்கின்றன." என்று அவர் கருதுகின்றார். மனிதனின் வாழ்வில் எது பற்றியும் கவலைப்படாமல் ஒரே சுதந்திரம் என்பது தான் மிக உயரமான நிலையாகும். பொருள் அனுபவமும் போலியான கௌரவமும் வேண்டாம். ச்சுவாங் சுவின் இந்த சிந்தனையும் கருத்தும் பிற்கால சமூகத்துக்கு ஆழ்ந்த செல்வாக்கை ஏற்படுத்தியது. இது மனிதகுலத்தின் மதிப்பிடற்கரிய சித்தாந்த செல்வமாகும்.

"ச்சுவாங் சு" என்ற நூல் கி.பி 3ஆம் நூற்றாண்டு முதல் 5ஆம் நூற்றாண்டு வரையான வெய் மற்றும் ச்சின் காலகட்டத்தில் மாபெரும் செல்வாக்கை ஏற்படுத்தியது. அது"சோ யீ","லௌ சு"ஆகிய நூல்களுடன் "சன் சியுவான்"என்று அழைக்கப்படுகின்றன. இவை, சீனாவின் இலக்கிய வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கின்றன. "ச்சுவாங் சு"என்ற நூல் தாங் வம்ச காலத்தில், (கி.பி.618-907)தௌ தத்துவப் பிரிவின் முக்கிய நூலாக விளங்குகின்றது.

ச்சுவாங் சு என்பவர், பிற்காலத்துக்கு ஏற்படுத்திய செல்வாக்கு, அவருடைய சிறப்புமிக்க தத்துவச் சிந்தனையில் மட்டுமல்ல, இலக்கியத்திலும் பிரதிபலிக்கின்றது. அவருடைய அரசியல் கருத்து, தத்துவச் சிந்தனை ஆகியவை, சில விதி வரிகள் அல்ல, பல துடிப்புள்ள வேடிக்கையான கட்டுகதைகள் மூலம்தான் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. பல அழகான வார்த்தைகள் மூலம் வாசிப்பவரின் மனதை ஈர்க்கும் வகையில் வெளிப்படுத்தப்படுகின்றன. இந்த நூல் ஒரு கட்டுக்கதை தொகுதியாக விளங்குகின்றது. இந்த கட்டுக்கதைகள் அளவுக்குமீறிய கற்பனை ஆற்றலைக் காண்பித்து, விசித்திரமான உருவத்தை அமைத்துள்ளன. எனவே, இந்த கதைகள் கலைத் தன்மையுடன் ஈர்ப்பு ஆற்றல் பெற்றவை.

1 2 3 4 5
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040