• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[பண்டைகால அரசியல்வாதிகள்、சிந்தனையாளர்கள்]

தௌ சிந்தனையை உருவாக்கியவர் லௌ டான்

லௌ டான் என்பவரின் பெயர் லீ அல், பொதுவாக அவரை லௌ சு என்று மக்கள் அழைக்கிறார்கள். அவர் எப்பொழுது பிறந்தது, எப்பொழுது இறந்தது என்பது தெரிவில்லை. வசந்த மற்றும் இலையுதிர் காலகட்டத்தின் (கி.மு 770-கி.மு 476) முடிவில், ச்சு எனும் அரசை சேர்ந்தவர். அவர் மிகவும் உயரமானவர். சோ வம்ச காலத்தில் நூல் பாதுகாப்புப் பணிக்கு பொறுப்பான ஒரு அதிகாரியாக இருந்தார். இதன் விளைவாக அவர் அறிவுமிக்கவராகத் திகழ்ந்தார். அப்போது மிகவும் புகழ் பெற்றார். கம்பியூசியஸ் இளைஞராக இருந்த போது லௌ டானை விசேஷமாக சென்றுபார்த்தார். சோ வம்சத்தின் மரியாதை பற்றி அவரிடம் கற்றுக்கொண்டார். பின்னர் சோ அரச குடும்பம் வீழ்ச்சியடைந்ததை பார்த்து, லௌ டான், தலைநகரான லோ யாங்கை விட்டுப் புறப்பட்டுச் சென்றார். ஹன்கு நுழைவுச் சாவடியை அடைந்த போது, "ஒழுக்கம் பற்றி" என்ற நூலை படைத்தார். இந்த நூல் மேல், கீழ் ஆகிய இரண்டு பகுதிகளாக பிரிக்கப்படுகின்றது. அவர் கறுப்பு மாட்டில் சவாரி செய்து, நுழைவுச் சாவடியிலிருந்து வெளியேறிய பின்னர் எங்கு போனார் என்பது யாருக்கும் தெரியவில்லை. லௌ டான் 60வயது வரை வாழ்ந்ததாக சிலர் கூறினர். வேறு சிலர், லௌ டான் 200 வயதுக்கு மேலாக வாழ்ந்ததாகவும் கூறினர். ஆனால், அவர் நீண்ட காலமாக வாழ்ந்தார் என்பது உறுதிதான். இது அவருடைய ஒழுக்கப் பயிற்சியுடன் தொடர்புடையது.

"ஒழுக்கம் பற்றி"என்ற நூல், "லௌ சு" என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த நூலில் உள்ளடக்கங்கள் அதிகம். சீனாவின் பண்டைக் கால பண்பாட்டிலான முக்கிய மரபுச் செல்வம் இதுவாகும். லௌ டான் ஒரு பொருள் முதல்வாத சிந்தனையாளர். சீனாவில், "தௌ" என்ற சிந்தனையை மிக உயர்ந்த தத்துவமாக அவர் கருதினார். "தௌ" என்றால் பாதை தான். எல்லா திசைகளிலும் செல்வது என்று பொருள். அப்போது, இதை ஒரு சட்டவிதியாக மக்கள் கருதினர். லௌ டான், இயற்கை மாற்றம், மனிதர்களுக்கிடை உறவைப் பார்வையிட்ட பின், "தௌ" என்ற சொல்லுக்கு புது பொருள் கற்பித்தார். "தௌ"என்றால் உண்மையான உருப்படியான பொருளாகும், அது எல்லா பொருட்களும் ஏற்படுவதற்கான மிக ஆரம்ப மூலமாகும் என்று லௌ டான் கருத்துத் தெரிவித்தார்.


1 2 3 4 5
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040