• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சிறுபான்மை தேசிய இன கட்டிடங்கள்]

பூங்கா கட்டிடங்கள்

சீனாவில் பூங்கா கட்டிடங்கள் நீண்ட வரலாறுடையவை. உலகில் வரலாற்றில் இவை புகழ்பெற்றவை. 3000 ஆண்டுகளுக்கு முந்திய சோ வம்சாட்சியிலே சீனாவின் மிகவும் தொன்மையான அரசு பூங்கா கட்டிடங்கள் தோன்றின. சீன நகரங்களில் வகை வகையான, வண்ணமயமான பூங்கா கட்டிடங்கள் உள்ளன. உலகில் உள்ள மூன்று பெரிய பூங்கா கட்டிடங்களில் இவை முக்கிய இடம் வகிக்கின்றன.

சீனப் பூங்கா கட்டிடங்களில், அளவில் பெரிய அரசு குடும்ப பூங்கா கட்டிடங்களும், சிறிய அளவில் ஆனால் மிகவும் நுணுக்கமாக கட்டப்பட்ட தனியார் பூங்கா கட்டிடங்களும் அடங்கும். இந்த கட்டிடங்களில் செயற்கை அழகும் இயற்கை அழகும் ஒருங்கிணைந்து வெளிப்படுகின்றன. அவற்றில், நீர் பரப்பு, மலைப் பகுதி, பூக்கள், புல்வெளி, மரங்கள், முற்றம், தாழ்வாரம், பாலம் முதலியவை மிக சிறந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளன. எங்கு பார்த்தாலும் மனதுக்கு மகிழ்ச்சியும் இன்பமும் நிறைந்த உணர்வு ஏற்படும்.

சீனாவின் பூங்காக்கள், பொதுவாக, நடைமுறை சமூகப் பொறுப்பு, ஒழுக்கம், அரசியல் சிந்தனை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, நாட்டை நிர்வகிக்கும் கன்பியூஷியஸ் சிந்தனையைப் பிரதிபலிக்கின்றன. இயற்கை சுற்றுச்சூழலையும் சிந்தனை வளர்ச்சியையும் உள்ளடக்கமாக கொண்ட தேவலோகச் சூழலை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் தௌ அறிவாளரின் சிந்தனையையும் வெளிப்படுத்துகின்றன. தவிரவும், உரிமையாளர்களின் சிந்தனையில் ஆழ்வதற்கும், சிந்தித்ததை எழுதுவதற்கும் ஏற்ற இயற்கை சூழலை வெளிப்படுத்துகின்றன. உலகில் புகழ்பெற்ற அரசு பூங்காவான யுவான் மிங் யுவான் பூங்கா, ச்சுவான் மாநிலத்தின் ச்சிங் செங் மலையில் காண்படும் பண்டைகால பாதை காட்சி, மற்றும் சில எழுத்தாளர்களின் பூங்காக்க ஆகியவை முறையே இந்த மூன்று வகை பூங்காக்களாகும்.

மேலை நாடுகளின் பூங்காக்கள் பொதுவாக கட்டிடங்களை மையமாகக் கொண்டு, கட்டிடங்களை முக்கியமாகக் கொண்டவை. சீனப் பூங்காக்களோ, இயற்கை காட்சியையும் பார்வையாளரின் இன்பமான உணர்வையும் மையமாக கொண்டவை. இயற்கையையும் மனிதனையும் ஒருங்கிணைப்பதில் சீனப் பூங்காக்கள் மேலும் கவனம் செலுத்துகின்றன.

சூச்சோ பூங்காக்கள்

1997ஆம் ஆண்டு உலக மரபுச் செல்ப் பட்டியலில் சேர்க்கப்பட்ட சூச்சோ நகரிலுள்ள பண்டைகால பூங்காக்கள் சீனப் பூங்கா அமைப்பின் தனிச்சிறப்புக்களை வெளிப்படுத்தியுள்ளன. சூச்சோ பூங்காக்களின் வரலாறு 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. தற்போது, பத்துக்கும் அதிகமான பூங்காக்கள் உள்ளன. சூச்சோ பூங்காக்களின் பரப்பளவு குறைவு தான். ஆனால் அவற்றிலுள்ள செயற்கை மலை, ஏரிகள், மலர்ச்செடிகள், பறவைகள் ஆகியவை, தாங் வமிச மற்றும் சோங் வமிச காலத்தில் எழுதப்பட்ட கவிதைகளில் வர்ணிக்கப்பட்ட சூழ்நிலையையும் இன்ப உணர்வையும் ஊட்டுகின்றன. வரம்புக்கு உட்பட்ட குறுகிய இடத்தில், செயற்கை மலை, மரம் செடி கொடிகள், திறந்த வெளி மற்றும் மாடியுடன் கூடிய கட்டிடம், குளம், சிறு பாலம் ஆகியவற்றை வெவ்வேறு அளவுகளில் அமைப்பதன் மூலம் கலை அம்சம் காட்டப்படுகின்றது. சாங்லாங் கூடாரம், சிங்கக் காடு, சோ செங் யுவான், லியூ யுவான் முதலியவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.

(படம்சூச்சோ பூங்காக்கள் )

யுவான் மிங் யுவான் பூங்கா

சீனாவில் மிக புகழ்பெற்ற அரசு பூங்கா எது என்றால், பூங்காக்களின் பூங்கா எனப்படும் பெய்சிங் யுவான் மிங் யுவான் பூங்காவாகும். சீனாவின் பல்வேறு இடங்களிலுள்ள பூங்காக்களின் வேறுபட்ட தோட்டக் கலையை ஒன்றிணைப்பதோடு, மேலை நாட்டுக் கட்டிடங்களின் பாணிகளையும் சேர்த்து, இது அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவில், பல்வேறு கட்டிடங்களின் மிக நுட்பமான கட்டுமானம், உங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி தரும். இந்த பூங்கா, அப்போதைய சீனாவின் தலைசிறந்த தோட்டம் சூழ்ந்த மாளிகையாக விளங்கியது. அது மட்டுமல்ல ஐரோப்பாவிலும் புகழும் பெருமையும் பெற்றது. இது 18வது நூற்றாண்டின் ஐரோப்பிய இயற்கை காட்சித் தோட்டத்தின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கை ஏற்படுத்தியிருந்தது. அழகுமிக்க யுவான் மிங் யுவான் பூங்கா 1860ஆம் ஆண்டு சீனாவை ஆக்கிரமித்த பிரிட்டிஷ் பிரெஞ்சு கூட்டணிப் படையால் தீவைத்து எரிக்கப்பட்டது.


1 2 3 4 5
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040