• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சிறுபான்மை தேசிய இன கட்டிடங்கள்]

சீனாவில் குடியிருப்புகள் கட்டிடங்கள்

சீனாவின் பல்வேறு இடங்களிலுள்ள குடியிருப்பு கட்டிடங்கள் மக்கள் குடியிருப்புகள் எனவும் அழைக்கப்படுகின்றன. குடியிருப்பு கட்டிடம், மிக அடைப்படை கட்டிட வகையாகும். அது, மிக முன்னாதாகவும் அதிகமாகவும் பரந்த இடங்களிலும் தோன்றின. சீனாவின் பல்வேறு இடங்களில் இயற்கை சுற்றுச்சூழலும், சமூக நிலையும் வேறுபட்டதாக இருப்பதனால், பல்வேறு இடங்களின் குடியிருப்பு கட்டிடங்களும் பல்வடிவ தோற்றங்களைக் கொண்டுள்ளன.

சீனாவின் ஹான் இனப் பிரதேசத்தில், குடியிருப்பு கட்டிடங்கள் முக்கியமாக ஒழுங்கான அமைப்புடைய வீடுகளாகும். சுஹோயுவான் எனப்படும், நான்கு பக்கங்களில் வீடுகளையும் நடுவில் முற்றத்தையும் ஒத்த அமைவில் கொண்ட கட்டிடங்கள் மிக அதிகமாக காணப்படுகின்றன. இந்த முற்றம், முன் பகுதி, பின்பகுதி என இரண்டு பகுதிகளாக பிரிக்கப்படுகின்றது. நடுப் பகுதியிலுள்ள வீடு மிகவும் உயர்வாக மதிக்கப்படுகின்றது. இந்த அறையில் குடும்பக் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. விருந்தினர் வரவேற்கப் படுகின்றார்கள். எல்லா வீடுகளும் முற்றத்தை நோக்கியதாக அமைந்துள்ளன. ஆளோடி ஒன்று நான்கு பக்கங்களிலுள்ள வீடுகளை இணைக்கின்றது. சுஹோயுவான் எனும் இந்த அமைவு சீனாவின் பண்டைகால தலைமுறையினரின் சட்டக் கண்ணோட்டதையும் குடும்ப அமைப்புமுறையையும் முழுமையாக வெளிப்படுத்தியுள்ளது. சதுர வடிவமான முற்றத்தில் அமைதியும், அன்பும் நிறைந்த உணர்வூட்டும் மலர்களும், மரங்களும் நிறைந்து சிறந்த வெளிப்புற வாழ்க்கைச் சூழலை உருவாக்குகின்றன. வட சீனா, வட கிழக்கு சீனா ஆகிய வட்டாரங்களில் உள்ள மக்கள் இத்தகைய வீடுகளில் வாழ்கின்றனர்.

படத்தின் விளக்கம்:

பெய்சிங்கிலுள்ள சுஹோயுவான் வீடுகள்

மைய அறையும் மாடிகளுடன் கூடிய கட்டிடமும்

தென் சீனாவில் குடியிருப்புக் கட்டிடங்கள் சற்று நெருக்கமாக கட்டப்பட்டுள்ளன. மாடிகளுடன் கூடிய வீடுகள் அதிகமாக காணப்படுகின்றன. சிறிய நிலப்பரப்பில் இந்த வீடுகள் சதுர வடிவமாகவும், முற்றத்தை மையமாக கொண்டும் கட்டப்பட்டுள்ளன. நடுவில் ஒரு மைய அறை இருக்கின்றது. எளிதாக கட்டப்பட்ட இத்தகைய வீடுகளை தென் சீனாவில் அதிகமாக காணலாம்.

புச்சியன் மாநிலத்தின் தென் பகுதியிலும் குவாங்துங் மாநிலத்தின் வட பகுதியிலும் குவாங்சி சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் வடப் பகுதியிலும் கோஜியா மக்கள் பொதுவாக பெரிய வகைக் குழுமக் குடியிருப்புக்களில் வசிக்கின்றனர். இவற்றில் சிலது வட்டமாகவும் சிலது சதுரமாகவும் இருக்கின்றன. நடுப் பகுதியில் மாடியற்ற ஒரு கட்டியடத்தில் மண்டபம் இருக்கின்றது. இந்த கட்டிடத்தைச் சூழ்ந்து 4 அல்லது 5 மாடிகளுடன் கூடிய கட்டிடங்கள் நிற்கின்றன. இந்த கட்டிடங்கள் பாதுகாப்பு தன்மைமிக்கவை. புச்சியன் மாநிலத்தின் யூங்திங் மாவட்டத்திலுள்ள கோஜியா மக்களின் மாடிகளுடன் கூடிய பல்வடிவ குடியிருப்புக்களின் எண்ணிக்கை 8000க்கு அதிகமாகும். அளவில் மிக பெரிய, அழகான இந்த கட்டிடங்கள் நடைமுறைக்கு ஏற்றவை. தனித்தன்மைமிக்கவை. இவை, ஒரு விசித்திரமான மக்கள் குடியிருப்பாக காட்சி தருகின்றன.

சிறுபான்மை தேசிய இன குடியிருப்பு கட்டிடங்கள்

சீனாவின் சிறுபான்மை தேசிய இனப் பிரதேசங்களிலும் பல்வகை குடியிருப்பு கட்டிடங்கள உள்ளன. எடுத்துக்காட்டாக, வட மேற்கு சீனாவில் சிங்கியாங் உய்கூர் இன மக்கள் வசிக்கும் வீடுகள் பொதுவாக தட்டையான முகடும் மண் சுவரும் கொண்ட மூன்று மாடி வீடுகளாகும். வெளியே ஒரு முற்றம் உண்டு. திபெத்தின மக்களின் வீடு வெளியே கற்களால் கட்டப்பட்டு, உட்புறம் மரங்களால் ஆன தட்டையான முகட்டைக் கொண்டதாகும். மங்கோலிய இன மக்கள் பொதுவாக நகரக் கூடிய மங்கோலிய கூடாரத்தில் வசிக்கின்றனர். தென்மேற்கு சீனாவிலுள்ள பல்வேறு சிறுபான்மை தேசிய இன மக்கள் மலை மற்றும் ஆற்றங்கரையில் வாழ்வதால், அவர்கள் பொதுவாக மரங்களால் கட்டப்பட்ட மாடி வீடுகளில் வசிக்கின்றனர். கிழே திறக்கப்பட்டு காலியாக இருக்க, மேலே ஆட்கள் வசிக்கின்றனர். அவற்றில், யுனான் மாநிலத்து தை இன மக்கள் வசிக்கும் மூங்கில் வீடு தனிச்சிறப்பியல்புடையது. தென் மேற்கு சீனாவில் வாழும் மியௌ இன மக்களும், துஜியா இன மக்களும் வசிக்கும் தொங்கு வீடு குறிப்பிடத்தக்கது. இத்தகைய வீடுகள் அதிகமாக மலைச் சரிவுகளில் கட்டப்பட்டுள்ளன. வீட்டுக்கு அடித்தளம் இல்லை. சில தூண்களே இந்த வீட்டை தாங்கி நிற்கின்றன. இந்த வீடுகள் இரண்டு மாடி அல்லது மூன்று மாடிகளைக் கொண்டவை. கடைசி மாடியில் தானியம் மட்டும் சேமித்து வைக்கப்படுகின்றது. ஆட்கள் தங்குவதில்லை, கீழ் பகுதியில் பயனற்ற சில்லறைப் பொருட்கள் போட்டு வைக்கப்பட்டிருக்கும். அல்லது, கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன.

வட சீனாவிலுள்ள குகை வீடும் பண்டைகால நகர குடியிருப்பும்

வட சீனாவிலா மஞ்சள் ஆற்றின் மேல் பகுதியில் குகை வீடுகள் அதிகமாக உள்ளன. ஷென்சி, கான்சு, ஹோனான், ஷான்சி உள்ளிட்ட மஞ்சள் மண் பிரதேசத்தில், உள்ளூர் மக்கள் இயற்கையான மண் சுவரில் குகையை தோண்டி, பல குகைகளை ஒன்றிணைத்து, செங்கல்களால் குகை வீடுகளை கட்டுகின்றனர். இத்தகைய குகை வீட்டில், தீ விபத்து தடுப்பு, இரைச்சல் தடுப்பு, குளிர்காலத்தில் வெப்பமாகவும் கோடைகாலத்தில் குளிராகவும் இருப்பது, நிலச் சிக்கனம், செலவு குறைவு, கட்டுமானப் பணி குறைவு ஆகிய சிறப்பியல்புகள் உள்ளன. இது, இயற்கை காட்சியுடன் வாழ்க்கையை இசைவாக இணைக்கின்றது. நில அமைப்புக்கு ஏற்றதாக வீடுகள் இருப்பதனால், மஞ்சள் மண் மீதான அங்குள்ள மக்களின் அன்புணர்வு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

தவிரவும், சீனாவில் சிதையாமல் பாதுகாக்கப்பட்ட பழைய நகரங்களும் உண்டு. இந்த பண்டைக்கால நகரங்களில் ஏராளமான பழைய குடியிருப்பு வீடுகள் காணப்படுகின்றன. அவற்றில், ஷான் சி மாநிலத்தின் பிங்யௌ பண்டை நகரமும், யுன்னான் மாநிலத்தின் லி ச்சியாங் பண்டை நகரமும் 1998ஆம் ஆண்டில் உலகில் மரபு செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

பிங்யௌ பழைய நகரம் இதுவரை மிகவும் முழுமையாக பாதுகாக்கப்பட்ட மிங் வம்ச மற்றும் ச்சிங் வம்ச ஆட்சியைச் சேர்ந்த பழம்பெரும் மாவட்ட நகரமாகும். மத்திய சீனாவில் சீன ஹான் இன மக்கள் கட்டிய பழைய நகரங்களின் ஒரு மாதிரியாகும். இன்றுவரை, இந்த நகரத்தின் சுவர், தெரு, குடியிருப்பு, கடை, கோயில் முதலிய கட்டிடங்கள் அடிப்படையில் சிதையாமல் இருக்கின்றன. அதன் கட்டமைப்பும் சிறப்புமிக்க பாணியும் மாறவே இல்லை. சீனாவின், அரசியல், பொருளாதாரம், பண்பாடு, இராணுவம், கட்டிடம், கலை முதலிய துறைகளின் வரலாற்று வளர்ச்சியை ஆய்வு செய்வதற்கு பிங்யௌ நகரம் ஆதாரம் வழங்கியுள்ளது.

நான்சுங் வம்ச ஆட்சியில் கட்டப்பட்ட லி ச்சியாங் பழைய நகரம், நாசீ இனத்தின் பாரம்பரிய கட்டிட கலையையும் வெளிப்புறத்திலிருந்து வந்த சிறப்பு கட்டிடக் கலையையும் ஒருங்கிணைக்கும் ஒரே ஒரு நகரமாகும். இந்த நகரில், மத்திய சீனாவில் உள்ளன கட்டிடங்களின் தாக்கம் தெரியவில்லை. நகரங்களில் பாதைகள் ஒழுங்கான முறையில் கட்டப்படவில்லை. நகரச் சுற்றுச் சுவரும் இல்லை. ஹெய்லுங்தான் இந்நகரின் முக்கிய நீர் வளமாகும். ஆற்று நீர், பல சிறிய நீரோடைகளாக நகரில் நுழைந்து வீடுகளைச் சூழ்ந்து ஓடுகின்றது நகரில் கால்வாய்களின் கரையில் மரக் கிளைகள் நீரை மெல்ல மெல்ல வருடும் காட்சியை எங்கெங்கும் கண்டுகளிக்கலாம்.

லி ச்சியாங் பழைய நகரம்


1 2 3 4 5
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040