• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சிறுபான்மை தேசிய இன கட்டிடங்கள்]

கல்லறைக் கட்டிடங்கள்

கல்லறைக் கட்டிடம் சீனாவின் பண்டைக்கால கட்டிடங்களின் ஒரு முக்கிய அம்சமாகும். மனிதன் இறந்த பின், அவனுடைய ஆவி அழிவதில்லை என்ற கருத்தைக் கொண்டு சீனாவின் பண்டைக்கால மனிதர்கள், இரங்கல் சடங்கிற்கு பெரும் முக்கியத்துவம் அளித்தனர். எனவே எந்த வர்க்கத்தைச் சேர்ந்தவரும் கல்லறையின் கட்டுமானத்தில் அதிக கவனம் செலுத்துகின்றனர். நீண்டகால வரலாற்று வளர்ச்சியுடன், சீனாவின் கல்லறை கட்டிடங்களும் பெரிதும் வளர்ச்சி கண்டுள்ளன. உலகில் மிகவும் அரிதான அளவுமிக்க பண்டைகால பேரரசர் மற்றும் பேரரசியின் கல்லறைகள் சீனாவில் கட்டப்பட்டன. அத்துடன் வரலாற்று வளர்ச்சியில் கல்லறைக் கட்டிடக்கலை, ஓவியம், கையெழுத்து, சிற்பம் முதலியத் துறைகளுடன் சேர்ந்து, பல்வகை கலையை பிரதிபலிக்கும் ஒட்டு மொத்த கட்டிடங்களாக மாறியுள்ளன.

கல்லறைக் கட்டிடங்கள், சீனாவின் பண்டைகால கட்டிடங்களில் மிகவும் கம்பீரமானவை, அளவில் மிக பெரியவை. இந்த கட்டிடங்கள், பொதுவாக இயற்கை நில அமைவை பயன்படுத்தி, மலையை சார்ந்து கட்டப்பட்டன. சிலது மட்டும் சமவெளியில் கட்டப்பட்டன. சீனாவில் கல்லறை தோட்டம் பொதுவாக நான்கு பக்கங்களும் சுவரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன. நான்கு பக்கங்களிலும் நுழைவாயில்கள் உண்டு, நான்கு மூலைகளிலும், கோணம் வடிவில் கட்டப்பட்ட கட்டிடங்கள் உள்ளன. கல்லறைக்கு முன்னால் முக்கிய பாதை இருக்கின்றது. தோட்டத்தில் பல தேவதாரு மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன. மிகவும் அமைதியான சூழல் நிலவுகிறது.

ச்சின் ஷி ஹுவாங் கல்லறை

ஷென்சி மாநிலத்தின் சிஆன் மாநகருக்கு அருகிலுள்ள லி ஷான் மலைக்கு வடக்கே அமைந்துள்ள ச்சின் ஷிஹுவாங் கல்லறை சீனாவில் மிகவும் புகழ்பெற்ற பேரரசர் கல்லறையாகும். 2000 ஆண்டுகளுக்கு முன் இது கட்டப்பட்டது. கல்லறையில் வரிசையாக வரிசையாக நிற்கும் இந்த பேரரசரின் படையிவீரர்கள் மற்றும் குதிரைகளின் சுடுமண் சிலைகள், இந்த கல்லறையை காவல்புரியும் "படை அணி" போலத் தோற்றமளிக்கின்றன. உலகின் எட்டு அதிசயங்களில் ஒன்றான இந்த சிலைகளின் கம்பீரமான வடிவமைப்பு, மற்றும் மற்றும் நுட்பத்தால், 1987ஆம் ஆண்டு உலகின் "மரபுச் செல்வப் பட்டியலில்"சேர்க்கப்பட்டது. ச்சின் ஷிஹுவாங் கல்லறையைச் சூழ்ந்து நிற்கும் பல்வடிவ படைவீரர் சிலைகளும் போர் குதிரை, ஆயுதங்கள் ஆகியவை அக்கால நடைமுறை வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் தலைசிறந்த படைப்புகளாகும். இவை, மிக உயர்ந்த வரலாற்று மதிப்பையும் நிலைநாட்டியுள்ளன என்று உலக மரபுச் செல்வக் கமிட்டி மதிப்பிட்டது.

படத்தின் விளக்கம்:

ச்சின் சிஹுவாங் படைவீரர் மற்றும் குதிரை சிலைகள்.

ஷென்சி மாநிலத்து சீஆன் மாநகரத்துக்கு அருகில் சீனாவின் பேரரசர் மற்றும் மன்னர்களின் கல்லறைகள் குவிந்திருக்கின்றன. ச்சி ஷிஹுவாங் கல்லறை தவிர, மேற்கு ஹான் வமிசக்காலத்தின் 11 பேரரசர் கல்லறைகளும், தாங் வமிகாலத்தின் 18 பேரரசர் கல்லறைகளும் உள்ளன. அவற்றில் ஹான் வம்ச பேரரசர் லியு ச்செ உடைய மாவ்லிங் எனும் கல்லறை மேற்கு ஹான் காலத்தைச் சேர்ந்த அளவில் மிக பெரிய கல்லறையாகும். அதில் புதைந்திருக்கும் செல்வப்பொருட்களும் மிக அதிகம். சௌலிங் என்பது தாங்வத்தைச் சேர்ந்த பேரரசர் லீ சி மினின் கல்லறையாகும். அதன் நிலப்பரப்பு மிக மிக அதிகம். தோட்டத்தில் 17 அதிகாரிகள் மற்றும் மதிப்புக்குரிய உற்றார் உறவினர்களின் கல்லறைகள் பக்கத்தில் கட்டப்பட்டிருக்கின்றன. சௌலிங் எனும் கல்லறையில் தரையின் மேலும் கீழும் எங்கெங்கும் மதிப்பிடற்கரிய தொல் பொருட்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. தாங் வம்சாட்சியின் ஆறு குதிரை படம், அப்போது மிகவும் புகழ்பெற்ற செதுக்கல் படைப்பாகும்.

மிங் வம்ச மற்றும் ச்சிங் வம்சாட்சிக் கால பேரரசர் கல்லறைகள்

மிங் வம்ச காலத்தின் பேரரசர்களின் கல்லறைகள் முக்கியமாக பெய்சிங் மாநகரின் ச்சாங்பிங் மாவட்டத்தில் உள்ளன. "13 கல்லறைகள்" எனும் இடத்தில் மிங் வம்சாட்சிக்காலத்தில் பெய்சிங் தலைநகராக நிர்ணயிக்கப்பட்டப் பின் இறந்த 13 பேரரசர்களின் கல்லறைகளாகும். இந்த இடத்தின் மொத்த நிலப்பரப்பு 40 சதுர கிலோமீட்டராகும். இந்த 13 கல்லறைகள் தற்போது சீனாவில் மிகவும் சிறப்பான முறையிலும் முழுமையாகவும் பாதுகாக்கப்பட்ட கல்லறைகளாகும். அவற்றில் மிகவும் கம்பீரமைனவை, சாங்லிங் கல்லறையும், திங்லிங் கல்லறையும் ஆகும். திங்லிங் கல்லறையின் நிலத்தடி மாளிகையின் வில் வடிவக் கற்கதவு மிகவும் உறுதியானது. நான்கு பக்கங்களிலும் நீரை வடிக்கும் சாதனங்கள் சிறப்பாக உள்ளன. அங்கு சற்று நீர் மட்டும் தேங்கியுள்ளது. வில் வடிவ கற்கதவுகள் அனைத்தும் விழாமல் உறுதியாக உள்ளன. கட்டிடங்களைக் கட்டுவதில் பண்டைக்கால சீன மக்களின் தலைசிறந்த தொழில் நுட்பத்தை இது வெளிப்படுத்தியுள்ளது.

தற்போது, சீனாவில் காணப்படும் அளவில் மிக பெரிய, கட்டிடங்கள் சிறிதும் சிதையாமல் இருக்கும் பேரரசர் கல்லறை, ச்சிங துங்லிங், கல்லறையாகும். இது 78 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் கட்டப்பட்டது, அதில் ச்சிங் வம்ச ஆட்சிக் காலத்தில் இறந்த 5 பேரரசர்களும், 14 பேரரசிகளும் பேரரசர்தம் நூற்றுக்கும் அதிகமான காமக்கிழத்தியர்களும் புதைக்கப்பட்டுள்ளனர். இந்த பேரரசர் கல்லறைத் தோட்டத்திலுள்ள கட்டிடங்கள் அனைத்தும் மிக அழகானவை. கட்டிடக்கலை மிக்கவை.

1 2 3 4 5
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040