• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[விழாவும் பழக்கமும்]

சூன் யியாங் திருவிழா

 சீன சந்திர நாள் காட்டியின் படி, செப்டெம்பர் 9ம் நாள், சீனாவின் பாரம்பரிய CHONG YANG திருவிழா. இந்த நாளில், மக்கள், CHRYSANTHEMUM மலர் பார்த்து, மலை ஏறி, ZHU YU எனும் நறுமணமுள்ள புல்லைக் கொண்டு, கேக் தின்ன வேண்டும். CHONG YANG திருவிழா பற்றி, ஒரு கதை உள்ளது.

கி.மு.3 நூற்றாண்டில், FEI CHANG FANG என்பவர், மந்திர ஆற்றல் உடையவர். அவர், காற்று, மழையைக் கட்டுப்படுத்தியது மட்டுமல்ல, கடவுளை அழைத்து, அரக்கனை கைதுசெய்யும் திறனும் பெற்றிருந்தார். HUAN JING எனும் இளைஞர், இதைக் கேட்டறிந்த பிறகு, அவரை ஆசியராக கொள்ள தீர்மானித்தார். இந்த இளைஞர் தமது தீர்மானத்தில் உறுதியுடன் இருந்ததால், FEI CHANG FANG, அவரை சீடனாக ஏற்றார். ஒரு நாள், FEI CHANG FANG, HUAN JING விடம் சொன்னார்:செப்டெம்பர் 9ம் நாளன்று, உங்களின் வீட்டில் ஒரு பெரிய சீற்றம் நிகழ்ந்த வரும். ஆனால், அன்று, நீங்கள் சிவப்பு நிறத் துணிப்பையில் ZHU YU எனும் நறுமணமுள்ள புல்லை எடுத்துக்கொண்டு, குடும்பத்தினர் அனைவருடன் உயரமான மலையில் ஏறி, chrysanthemum மது குடிக்க வேண்டும் என்றார். HUAN JING, தமது ஆசிரியர் கூறிய படி செயல்படுத்தினார். செப்டெம்பர் 9ம் நாள் அமைதியாக கடந்தது. இரவில், வீட்டுக்குத் திரும்பிய பின், வீட்டிலுள்ள ஆடு மாடு அனைத்தும் உயிரிழந்ததைக் கண்டார். அவர்கள் ஒரு சீற்றத்தைத் தவிர்த்துள்ளனர். இதற்கு பிறகு, ஒவ்வொரு ஆண்டின் செப்டெம்பர் 9ம் நாளில், chrysanthemum மது பருகி, மலை ஏறுவது வழக்கமாக மாறிவிட்டது.

கேக் தின்பது, CHONG YANG திருவிழாவின் இன்னொரு வழக்கமாகும். சீன மொழியில், கேக் என்பது, உயர் என்பதுடன் ஒரே உச்சரிப்பு. சொத்தையும் செழுமையும் பெறுவது என்பது, அதன் பொருள். பாசு அரிசி, மஞ்சள் அரிசி, பேரீச்சம் பழம் ஆகியவற்றை பயன்படுத்தி, மக்கள், கேக் தயாரிக்கின்றனர். மேலே 5 நிறமான கொடிகள் வைக்கப்படுகின்றன.

கடந்த சில ஆண்டுகளில், CHONG YANG திருவிழா, முதியோர் விழாவாக மாற்றிவிட்டது. சீன மக்கள், முதியோருக்கு மதிப்பையும் அன்பையும் தெரிவிப்பதை இது காட்டுகிறது.

1 2 3 4 5 6 7 8
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040